Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மாதுரி தீட்சித், சோனாக்‌ஷி சின்ஹா, வருண் தவான், ஆலியா பட், சஞ்சய் தத் என பளபள பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘கலன்க்.’ அதிக பொருட்செலவில் மரண மாஸாக இந்த  வரலாற்றுப் படம்  உருவாகி வருகிறது. சமீபத்தில் வருண் தவான் தனது ட்விட்டர்  பக்கத்தில் ‘ஆலியாவுடன் நான் இணையும் நான்காவது படம்’ என செல்ஃபி பகிர, வைரலானது. மூவிசேலஞ்ச்

கிப்தைச் சேர்ந்த ஓவியர் ஹசன் -எல் ஷார்க் தனது ஓவியத்தை மின்யா கவர்னரேட் கேலரி ஒன்றில் பார்வைக்கு வைத்துள்ளார். பலரும்  அவருடைய ஓவியங்களை வியந்துள்ளனர். அதற்குக் காரணம் அவர் பயன்படுத்தும் வண்ணங்கள். இந்த வண்ணங்களை ஹசன் தானே உருவாக்கிப் பயன்படுத்துகிறார். எப்படி இது சாத்தியம் ! என ஆச்சர்யப்படுபவர்களிடம், ‘வண்ணங்களை உருவாக்குவதுதான் எளிமையான வேலை’  என்று மெல்லிய புன்னகை உதிர்க்கிறார் ஹசன். வண்ணமே

மூக வலைதளங்களில் #10yearschallenge வைரலாகியிருக்கிறது. ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த சேலஞ்ச் பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. face recognition மென்பொருளின் கட்டமைப்புக்குத் தேவைப்படும் வயது முதிர்ச்சியைக் கண்டுபிடிக்கும் சிறப்பம்சத்தின் துல்லியத்தைக் கூட்டவே, பயனாளர்கள் அப்லோடு செய்யும் புகைப்படங்கள் பயன்படும். இந்தப் போட்டோக்களைப் பெறவே இந்த சேலஞ்ச் தொடங்கப்பட்டதாக அமெரிக்க டேட்டா  வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், ஃபேஸ்புக் இதைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்த சேலஞ்ச் பயனாளர்களில் ஒருவர் தொடங்கியதே தவிர, ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இதில் சம்பந்தம் இல்லை என விளக்கம் அளித்திருக்கிறது.

சென்ற வருடம் பேட் மேன், வீரே தி வெட்டிங், சஞ்சு என மூன்று முக்கியமான படங்களில் நடித்த சோனம் கபூரின் இந்த வருட முதல் ரிலீஸ் ‘ஏக் லடுக்கி கோ தேக்கா தொ ஐசா லகா’ (Ek Ladki Ko Dekha Toh Aisa Laga). சோனம் கபூரின் தந்தை அனில் கபூரின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்றின் முதல் வரியையே இந்தப் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி, அனில் கபூரே இதில் சோனம் கபூரின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பெண்ணே மற்றொரு பெண்ணைக் காதலிக்கும் கதையில் செம போல்டாக நடித்திருக்கிறாராம் சோனம் கபூர். கூடவே பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன் ராஜ்குமார் ராவ், மூத்த நடிகை ஜூஹி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். அதுசரி, இதில் சோனம் கபூர் காதலிக்கும் அந்தப் பெண் யார் தெரியுமா? நம்மூர் ரெஜினா கசாண்ட்ரா!

இன்பாக்ஸ்

மாதவன், அனுஷ்கா இணையவிருக்கும்  ஹாலிவுட் படம் ‘சைலன்ஸ்.’ அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கவுள்ள இப்படத்திற்கு, ‘கில் பில்’ படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கும் கதை என்பதால், மேலும் பல ஹாலிவுட் நடிகர்களும் இப்படத்தில் இணையவிருக்கிறார்கள். அமைதி ஆரவாரம்!

மெகா பட்ஜெட் மியுசிக்கல் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ரோகாந்த், இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். இசைக் கலைஞராக இப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.