`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்!’ - விஷால் | Vishal thrashes stay order plea against Ilayaraja 75 concert

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (23/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (23/01/2019)

`கேஸுக்கான செலவுல ஜே.எஸ்.கே `இளையராஜா 75’ டிக்கெட் வாங்கி பார்த்திருக்கலாம்!’ - விஷால்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தை மும்பையின் ப்ரைம் ஃபோக்கஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி வைத்தனர். மேலும், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அதே கட்டடத்தில் 5,000 சதுரடிக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தின் கிளை அலுவலகத்தையும் தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் விஷால்.

விஷால்

அப்போது, தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் இளையராஜா நிகழ்ச்சிக்குத் தடைக் கேட்டு வழக்கு தொடுத்தத்து குறித்து பேசுகையில், ``நீதிபதிகளை தெய்வமா மதிக்கிறோம். இந்த வழக்குகள் எல்லாம் நல்லபடியா முடியும். 1,000 படங்களுக்குமேல் இசையமைத்த இளையராஜா என்ற இசை மேதையைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது.

விஷால்

ஜே.சதிஷ்குமார் எங்கள் சங்க உறுப்பினர். எந்த விஷயமா இருந்தாலும் அவர் நேரே கேட்டிருந்தா சொல்லியிருப்போம். அந்த வழக்கு போட்ட செலவுல இளையராஜா 75 ஷோவுக்கு டிக்கெட் வாங்கி பார்த்துருக்கலாம். தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த அனைத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்போம். மார்ச் 3-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார் விஷால்.