'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் ! | hansika got injured in maha shooting spot

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (23/01/2019)

'மஹா' ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹன்சிகா காயம் !

அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம், 'மஹா'. ஹீரோயின் சென்ட்ரிக் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படம், அவருக்கு 50-வது படம். இப்படத்தின் புதுப்புது போஸ்டர்களை அவ்வப்போது வெளியிட்டுவருகிறது படக்குழு. சென்னையில் நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பில், தற்போது ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கிவருகின்றனர். ஒரு சேஸிங் காட்சி எடுக்கும்போது, ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது என செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் ஜமீலிடம் பேசினோம்.

ஹன்சிகா

 
"இந்தப் படத்தின் போட்டோ ஷூட்டிற்கு மட்டும் ஆறு மாதம் எடுத்துக்கிட்டோம். 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கும்போது ஹன்சிகாவுக்கு கையிலும் கால் முட்டியிலும் காயம் ஏற்பட்டது. ஆனால், முதலுதவி எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் நடிக்கத் தொடங்கிவிட்டார். சென்னையில் இந்த மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்த மாதம் பாண்டிச்சேரி செல்ல உள்ளோம். ஒரு சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது, ஜிப்ரானுக்கு 25-வது படமும்கூட. ஹன்சிகா தவிர,தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை மே மாதம் வெளியிட இருக்கிறோம்" என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க