மலையாளத்தில் அறிமுகமாகும் சன்னி லியோன்! | sunny leone debut in malayalam cine industry

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:05:00 (24/01/2019)

மலையாளத்தில் அறிமுகமாகும் சன்னி லியோன்!

'வீரமாதேவி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் சன்னி லியோன். வரலாற்று கதையில் உருவாகும் இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்திலும் 'ரங்கீலா' எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.

சன்னி லியோன்

இந்தப் படத்தை சந்தோஷ் நாயர் என்பவர் இயக்க பேக்வாட்டர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்மூட்டி நடிக்கும் 'மதுரராஜா' படத்திலும் தமிழில் விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார். சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்தபோது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க