சர்ப்ரைஸ் கேரக்டர்! - ஜெயலலிதா பயோபிக்கில் சமுத்திரக்கனி! | Actor samuthirakani plays role in a.l.vijay movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (24/01/2019)

கடைசி தொடர்பு:17:56 (24/01/2019)

சர்ப்ரைஸ் கேரக்டர்! - ஜெயலலிதா பயோபிக்கில் சமுத்திரக்கனி!

இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுக்கும் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்த வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதாவின் கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கயிருப்பதாக தகவல் வந்தது. 

சமுத்திரக்கனி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறவேண்டுமென்றால் கண்டிப்பாக சசிகலா பற்றியும் அதில் குறிப்பிட வேண்டும். சசிகலாவின் கேரக்டரில் சாய் பல்லவியை எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்களும் வந்தன. ஆனால், இது எது பற்றியும் இயக்குநர் ஏ.எல்.விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவிக்க இல்லை. இதற்கிடையில் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் சமுத்திரக்கனி கமிட் ஆகியிருக்கிறார். இந்தச் செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, 'ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், முக்கியமான கேரக்டரில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன். ஆனால், அது எந்த மாதிரியான கேரக்டர் என்பது சர்ப்ரைஸ். படத்தின் ரிலீஸ் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர இயக்குநர் பாரதிராஜா மற்றும் ப்ரியதர்ஷினி ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க