`இதுவும் செம க்ரைம் படம்தான்!’ - உற்சாகத்தில் பிக் பாஸ் ஜனனி | actress janani says about her film with ashok selvan again

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (24/01/2019)

`இதுவும் செம க்ரைம் படம்தான்!’ - உற்சாகத்தில் பிக் பாஸ் ஜனனி

`பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா என அவர்களின் பட அப்டேட்டுகள் வந்தன. ஆனால், நடிகை ஜனனி ஐயர் எந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, சந்தீப் ஷியாம் இயக்கத்தில் ஜனனியும் அசோக் செல்வனும் இணைந்து நடிக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து ஜனனியிடம் பேசினேன்.

ஜனனி ஐயர்

அப்போது பேசியவர், ``நான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தபோதே எனக்குத் தெரியும். இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்களுடைய நண்பர்கள், வீட்டுக்குள் வந்தனர். அப்படி என்னைப் பார்க்க அசோக் வரும்போதே, `இந்த மாதிரி ஒரு கதை இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ வெளியவந்து கேட்டுட்டு சொல்லு'னு சொன்னார். நான் நிகழ்ச்சி முடிஞ்சு வெளிய வந்து ஒரு சில நாள்களிலேயே இந்தப் படத்தின் இயக்குநர் சந்தீப் என்னிடம் கதை சொன்னார். எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. 'தெகிடி' படத்துக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க இருக்கோம். அந்தப் படம் மாதிரி இதுவும் சூப்பர் க்ரைம் படமா இருக்கும். முதல் ஷெட்யூல் ஊட்டியில நடக்குது. சீக்கிரமாகவே ஷூட்டிங் ஆரம்பிச்சிடும். அதுக்காகத்தான் வெயிட்டிங்’’ என்றார் உற்சாகமாக.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க