`இதுல வேற லெவல்ல இருப்பார் அரவிந்த் சாமி!’ - இயக்குநர் நிர்மல் குமார் | director nirmal kumar shares about his next film with arvind swamy again

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (24/01/2019)

`இதுல வேற லெவல்ல இருப்பார் அரவிந்த் சாமி!’ - இயக்குநர் நிர்மல் குமார்

`சலீம்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நிர்மல் குமார் இயக்கியிருக்கும் படம் `சதுரங்க வேட்டை 2'. அரவிந்த்சாமி, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் ஒரு சில காரணங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அவர் இயக்கும் அடுத்த படத்திலும் அரவிந்த் சாமிதான் ஹீரோ. இப்படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் நிர்மல் குமாரிடம் பேசினேன். 

அரவிந்த் சாமி


``இப்போ நான் ஒரு தெலுங்குப் படம் இயக்கிட்டு இருக்கேன். லவ் வித் ஆக்‌ஷன் ஜானர்ல இந்தப் படம் இருக்கும். உதய் ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோ - ஹீரோயினா நடிக்கிறாங்க. இந்தப் படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் பண்ண ப்ளான் பண்றோம். இதை முடிச்சுட்டு மார்ச் இறுதியில அந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம். அதிக காட்சிகளை சென்னையிலயும் சீனாவுல கொஞ்ச போர்ஷனும் எடுக்க இருக்கோம். `சதுரங்க வேட்டை 2' முடியுற சமயத்துலயே `வேற கதை இருந்தால் சொல்லுங்க பண்ணுவோம்'னு சொன்னார். அப்படிதான் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதுல அவர் வேற லெவல்ல இருப்பார். ஆக்‌ஷன் கலந்த ஃபேமிலி என்டர்டெயினர் ஜானர்ல இந்தப் படம் இருக்கும். ஹீரோயின் ரோலுக்கு தமன்னா அல்லது காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் படத்துடைய பெயரும் ஃபர்ஸ்ட் லுக் வரும்" என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க