Published:Updated:

பவர் ஸ்டாரின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்!

பவர் ஸ்டாரின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்!
பவர் ஸ்டாரின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்!
பவர் ஸ்டாரின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்!

சென்னை: மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில்  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (46) மற்றும் கிருஷ்ணசாமி (45)ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் தியாகராயர் நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை கூறி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மோசடி செய்த பணத்தில், வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கமிஷன் தொகை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கைது செய்யப்பட்ட வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிகாரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.

##~~##
இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார். இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010ஆம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ண சாமியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் அடைத்துள்ளனர். 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள்.