'சங்கர் போட்ட கண்டிஷன்.. கமலைப் பற்றிய மென்ஷன் - டெல்லி கணேஷின் 'இந்தியன் 2' ஷேரிங்க்ஸ் | actor delhi ganesan speaks about indian 2 film

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (25/01/2019)

கடைசி தொடர்பு:11:54 (25/01/2019)

'சங்கர் போட்ட கண்டிஷன்.. கமலைப் பற்றிய மென்ஷன் - டெல்லி கணேஷின் 'இந்தியன் 2' ஷேரிங்க்ஸ்

1996 ல் வெளியாகி சக்கைப் போடு போட்டப் படம் இந்தியன். தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. சங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எட்டு நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

`இந்தியன் 2' படத்தில் கமலுடன் இணைந்து முக்கிய ரோலில் நடிக்கிறார் டெல்லி கணேஷ். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தெனாலி, நாயகன், அவ்வை சண்முகி, பாபநாசம் என கமலஹாசனின் பெரும்பாலான படங்களின் நடித்திருப்பவர் இவர்.  கமலுக்கு இவர் மீது எப்போதும் நல்ல மரியாதையும், நட்பும் உண்டு. தற்போது தயாராகிவரும் இந்தியன் 2 படத்திலும் கமலுடன் டெல்லி கணேஷ் இணைகிறார். ஆனால் சங்கருடன் டெல்லி கணேஷுக்கு இதுதான் முதல் படம். 

டெல்லி கணேஷ்

``உங்களுடைய ரோலில் என்ன மாற்றமாக இருந்தாலும் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி தரேன். ஆனால், பட ரிலீஸுக்கு முன்னாடி படத்தைப் பத்தி வெளியில சொல்லக் கூடாதுனு ஒரு கண்டிஷன் போட்டார். அந்த அன்புக் கட்டளையை நானும் ஏற்றுக்கொண்டதால் இப்போதைக்கு `இந்தியன் 2' கதைப்பற்றி எதையும் பகிர்ந்துக்க முடியாது. என்பவர் தொடர்கிறார்,

``என்னுடைய வயது, அனுபவத்துக்கு மரியாதை கொடுத்தார் சங்கர் சார். ரொம்ப சாஃப்டா சிரிச்சிட்டு ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் என்னால் மறக்க முடியாது. அவரோடு எனக்கு ஃபர்ஸ்ட் படம் என்றாலும் அது பெஸ்ட் படம். அதே மாதிரி கமலுடன் மறுபடியும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு அமைந்திருக்கு. பாபநாசத்துக்குப் பிறகு இந்தப் படம் அமைந்திருக்கு. கமல் எதிலும் இன்னும் மாறல. அதுதான் அவருடைய பிளஸும் கூட. அவர் அரசியலில் இருக்கறதால நிறைய போன் கால் வரும். உடனே பேசணும். அவரைப் பார்க்க நிறைய பேர் வருவாங்க. இப்படி இருக்கும்னு எதிர்பார்ப்போம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்ல. ஷூட்டிங் என்றால் ஷூட்டிங்தான். அங்க யாரும் வரக்கூடாது. ஷூட்டிங் நேரத்தில் யாரும் பேசக் கூடாதுனு சொல்லியிருப்பார்'' என்பவர், 

டெல்லி கணேஷ்

``இவ்வளவு வருஷ அனுபவத்தில் நடிகர்கள் சில பேர் கட்சியில் இருந்ததைப் பார்த்திருக்கேன். நிறைய போன் கால் வரும். கூட்டம்ணே வர முடியுமானு எல்லாம் கேட்டு தொடர்ந்து போன் கால் வரும். இன்னொன்று வெள்ளை வேட்டியோடு எப்பவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. அப்படி யாரையும் அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்க முடியாது. ஆரம்ப காலத்தில் நானும், கமலும் எப்படி பேசிட்டு, ஜோக் அடிச்சி சிரிச்சிட்டு இருந்தோமோ அதேமாதிரிதான் எப்பவும். ஷூட்டிங் ஸ்பாட்டை சிரிச்சிப் பேசிட்டு கலகலனு வச்சிட்டு இருந்தோம். எனக்கு அது ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா.. எனக்கு 40 வருடத்துக்கும் மேல் இந்த சினிமா துறையில் அனுபவம் இருக்கு.  ஒவ்வொரு படத்துக்கும் நடிகர்கள் பலர் தங்களை சூழலுக்கு ஏற்ற மாதிரி மாத்திட்டே இருப்பாங்க. ஆனால் கமல், எந்த வகையிலும் தன்னுடைய சக நடிகர்களிடம் வித்தியாசப்படுத்திக் காண்பிக்காமல் நடந்துகொள்ளும் நபர். பொதுவாக என்னுடைய நடிப்புதான் எதார்த்தமா இருந்ததென்று சொல்லுவாங்க. ஆனா உண்மையில் நிஜத்திலும் எதார்த்தமான மனிதர் கமல். இதுவரைக்கும் நான் எந்த கட்சியிலும் இல்ல, இனியும் சேரப் போறது இல்ல. நான் இதை ஏன் சொல்றேனா.. பொதுவாகவே யாராவது ஒருத்தரை இன்னொருத்தர் புகழ்ந்து பேசினா ஆதாயம் கிடைக்கும்.. அதனால்தான் பேசுறான்னு சொல்லுவாங்க. இதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்ல. எனக்குக் கமல் எப்பவும் பெஸ்ட்டாதான் இருக்கார்.'' என்று சிரிக்கிறார் டெல்லி கணேஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க