பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/RahimGazzali

கூட்டிப் பெருக்கி ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளை எடுத்து சுத்தமாக இருக்கும் இடத்தில் போட்டு மறுபடியும் கூட்டுது என் ஒன்றரை வயது மகள். அநேகமா எதிர் காலத்தில் மாநில கவர்னராக வருவதற்கான எல்லா அறிகுறியும் இப்பவே தெரிய ஆரம்பிச்சுடுச்சு.

வலைபாயுதே

twitter.com/ival_Saranallu

தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால் அப்பாவாகத்தான் வருவார்கள்!

twitter.com/Thaadikkaran

பார்க் கூட்டிட்டுப் போய் விளையாடச் சொன்னா வேடிக்கை பார்க்கிறது, ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் அமைதியா இருக்கச் சொன்னா அங்க போய் விளையாடுவது குழந்தைகளின் டிசைன்..!

twitter.com/Ilangospm

சம்பளமே இல்லாமல் பாடம் நடத்தத் தயார் என்று சிலர் அறிவித்திருக்கிறார்களாம். தயார் நிலையில் இருங்கள், அடுத்த வாரம் துப்புரவுத் தொழிலாளர் தோழர்களின் போராட்டமும் தொடங்கவிருக்கிறது.

twitter.com/drkvm


சொல்றது பொய், அது...  2100 கோடியா இருந்தா என்ன...? 21000 கோடியா இருந்தா என்ன..?

twitter.com/Suyanalavaathi

தாடி வைத்த மோடி பிரதமராக இருக்கும்போது தாடி வைத்த நான் ஏன் முதல்வராகக்கூடாது - சரத்குமார்# இதை கேட்டதும் கட்சில இருந்த நாலுபேரும் ஓடியிருப்பாங்க.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar

எத்தனை லட்சம் போட்டு வீடு கட்டினாலும், பழைய பெயின்ட் டப்பாதான் பாத்ரூம் பக்கெட்.

twitter.com/sultan_Twitz


“உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது” - முதல்வர் பழனிசாமி # காசியப்பன் பாத்திரக்கடைக்குப் போய் கப்பு வாங்கி பேர் அடிச்ச மொமன்ட்.!

twitter.com/itz_azha

மோடி டீ விற்று நான் பார்த்ததே இல்லை-ப்ரவீன் தொகாடியா # நாங்களும் பார்த்தது இல்ல, ஆனா அவரு வடை சுட்டுப் பார்த்திருக்கோம்.

facebook.com/manivanna.siva

ஆறு குக்கர் விசில் வந்தப்பறம் கேஸ் ஆப் பண்ணிடுங்கன்னு மனைவி சொல்லும்போது வர்ற பதற்றம், அப்ரைஸல் மீட்டிங்கைவிடக் கொடுமை யானது!

facebook.com/manivanna.siva 

 
நடு இரவில் மனைவியைவிட தெருநாய் ஆபத்தில்லை என்று உணர்ந்து தெருவில் இறங்கிய புத்தன் என்னைப் பொறுத்தவரை ஒரு மாவீரன்!

facebook.com/AdamzGame

சன் டிவியில சர்க்கார் பார்க்கல?

பார்க்கல...

ஏன்?

எப்புடி பார்க்க முடியும் அதான் தியேட்டர்ல பார்த்துட்டு டிவிய போட்டு ஒடச்சுட்டோமே.

வலைபாயுதே

twitter.com/mohanramko

‘வண்டி ஒரு 5 நிமிடம் நிற்கும், அதற்குள் டீ, காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு வந்திடுங்க’ என்று சொல்லியே பிறக்க வைக்கிறது வாழ்க்கை. நாம்தான் இங்கேயே வாழ்வதுபோல சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..

facebook.com/santhosh.narayanan.319

தோசையம்மா தோசை  பாடலைக் கட்டுடைத்துப் பார்த்தால் நான்கு கேள்விகளும் நான்கு பதில்களும் தோன்றுகின்றன. 1. அம்மா மட்டும்தான் தோசை சுடணுமா? 2. அது ஏன் அப்பாவுக்கு நாலு, அம்மாவுக்கு மூணு. 3. பாப்பாவுக்கு ஏன் ஒண்ணு. குழந்தை என்பதாலா? 4. திருப்பிக் கேட்டால் ஏன் பூசை? சந்தோஷமாகத்தானே சுட்டுக் கொடுப்பார்கள். குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை என்பதுதானே இன்றைய பெற்றோர்களின் கவலை.

வலைபாயுதே

1. பெண்கள் மட்டுமே சமைப்பார்கள் என்கிற பார்வை இருந்த அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பாடல்.

2. அப்பா மட்டுமே வெளியே போய் உழைக்கிறார் அதனால் அவருக்கு நான்கு தோசை. அம்மா வீட்டில் இருக்கிறார். அவளுக்கு ஒன்று குறைவாகப் போதும் என்கிற கண்ணோட்டம் இருந்த காலத்தில் எழுதப்பட்ட பாடல்.

3. பாப்பா என்பதில் ஒரு ஓரவஞ்சனை இருப்பதாக சந்தேகம் வருகிறது. குழந்தையைத்தான் சொல்கிறார்கள் என்று விட்டுவிட முடியவில்லை. ஆண் குழந்தைகளுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கவனிப்பு இருந்ததைப் பார்த்திருக்கிறோம்.

4. தோசையெல்லாம் வருஷத்துக்கு ஒரு தடவை செய்யும் காஸ்ட்லி பலகாரம் என்று இருந்த காலத்தில் எழுதப்பட்ட பாடல். லேசாக வறுமையும் எட்டிப்பார்க்கிறது.

வரலாற்றைத் திருத்தி எழுதுவோம்
தோசையம்மா தோசை
அப்பா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்தமாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கும் நாலு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கும் ரெண்டு
தின்னத்தின்ன ஆசை
திருப்பிக் கேட்டால் மேலும்
தினுசாய்க் கிடைக்கும் தோசை.

சைபர் ஸ்பைடர்