உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசர வைத்த நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு! | ajith's daksha team designed drone taxi mesmerized global investors meet

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/01/2019)

கடைசி தொடர்பு:15:05 (25/01/2019)

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசர வைத்த நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு!

ட்ரோன் டாக்ஸி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடிகர் அஜித் வழிகாட்டுதலின் பேரில் வடிவமைத்த ஆளில்லா விமானம், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.    

 

தக்‌ஷா

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் இக்குழு பங்குபெற்று வருகிறது. தக்‌ஷா குழுவின் ஆலோசகராகத் திரைப்பட நடிகர் அஜித்குமாரை பல்கலைக்கழகம் நியமித்தது. காரணம், நடிகர் அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். அஜித் தனக்கு கொடுத்த பொறுப்பை கச்சிதமாகக் கையாள்கிறார். அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணி ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. 

ட்ரோன் டாக்ஸி

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்‌ஷா குழு வடிவமைத்த ட்ரோன் டாக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகள் அதைப் பார்வையிட்டனர். 70 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன் டாக்ஸி இரண்டு பேரை தூக்கிச் செல்லும் திறன் வாய்ந்தது. அவசர காலத்தில், ட்ரோனை ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்த முடியும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன் டாக்ஸி பார்வையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.