"கார்த்தி சாருக்கு முதல்ல வேற கதை சொன்னேன்" - அப்டேட் சொல்லும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் | director lokesh kanagaraj shares his film update

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (25/01/2019)

கடைசி தொடர்பு:20:15 (25/01/2019)

"கார்த்தி சாருக்கு முதல்ல வேற கதை சொன்னேன்" - அப்டேட் சொல்லும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் நடித்திருக்கும் படம் 'தேவ்'. இந்தப் படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. ஹீரோயின் இல்லாத இந்தப் படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பேசினோம். 

கார்த்தி


" 'மாநகரம்' பார்த்தவுடனே கார்த்தி சார் பேசினார். அவருக்குப் படம் பிடிச்சிருந்தது. நான் கார்த்தி சார்கிட்ட முதல்ல வேற கதை சொன்னேன். ஆனா அவர், கால்ஷீட் உட்பட அந்தக் கதைக்கு நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. சரின்னு வேற கதை சொன்னேன். அதுவும் கார்த்தி சாருக்கு பிடிச்சிருந்தது. அந்தக்  கதையைத்தான்  இப்போ படமா பண்ணிட்டு இருக்கோம். முதல் ஷெட்யூல் தென்காசி, கேரளா எல்லை உள்ளிட்ட பகுதியில் எடுத்து முடிச்சிட்டோம்.. இப்போ, ரெண்டாவது ஷெட்யூல் சென்னையில போயிட்டு இருக்கு. இதை இந்த மாதம் முடிச்சிட்டு, அடுத்த மாதம் கடைசி ஷெட்யூலை எடுக்க ப்ளான் பண்ணியிருக்கோம். மார்ச்ல படத்தை முடிச்சுடுவோம். ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் அன்பறிவ் பண்றாங்க. படம் சூப்பரா வந்துட்டு இருக்கு. நாங்களுமே ரொம்ப ஆர்வமா இருக்கோம். இந்தப் படத்துக்குப் பிறகு, முதல்ல அவர்கிட்ட சொன்ன கதையையும் பண்ணணும்" என்றார் உற்சாகமாக.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க