பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ரு பக்கம் ‘வடசென்னை 2’ படத்துக்காக ரசிகர்கள் வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்க, `அசுரன்’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.  இப்படத்தில் நாயகியாக மலையாளத் திரையுலகின் டாப்ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவருக்கு இது முதல் நேரடித் தமிழ்ப்படம். முக்கியக் கதாபாத்திரத்தில் கருணாஸின் மகனை அறிமுகப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டிச் சுற்றுவட்டாரத்தில் நடக்கவுள்ளதாம். The Warrior!

மீர்கானின் ‘தங்கல்’ படத்தின் கதாநாயகிகளாக நடித்த சானியா மல்ஹோத்ரா, ஃபாத்திமா சனா ஷேக் இருவரும் மீண்டும் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு இயக்கத்தில் டார்க் காமெடி ஆன்தாலஜியாக இப்படம் தயாராகவுள்ளது. அபிஷேக் பச்சன், ராஜ் குமார் ராவ், ஆதித்யா ராய் கபூர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். வெல்கம்!

இன்பாக்ஸ்

விஜய் சேதுபதி ராயல் என்ஃபீல்டின் தீவிர ரசிகர். சமீபத்தில் ட்ரெண்டிங் ஹிட்டடித்த `96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமாருக்குப் புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர் செப்டார் பைக்கைப் பரிசாகக் கொடுத்துள்ளார். ரூ. 3 லட்சம் விலை கொண்ட  650 cc பைக்  170 கிமீ வேகத்தில் பறக்கும்! ‘0096’ என்ற நம்பர் பிளேட் பொருத்திக்கொண்டு ஜாலியாக வலம்வருகிறார் பிரேம். ராயல் வெற்றி!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜீ.ஜீ சிங்க அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்டேஜில், நிஜ சிங்கங்களுக்கு அருகே பார்வையாளர்கள் தங்குவதற்கான வசதி உள்ளது. ஜீ.ஜீ லயன்ஸ் என்கிற தன்னார்வ அமைப்பு இந்த வசதியை வழங்கி வருகிறது. இதிலிருந்து பெறப்படுகிற கட்டணம் சிங்கங்களின் பராமரிப்புக்குச் செலவிடப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 70 சிங்கங்கள் உள்ளன. ஓர் இரவுக்கு ரூ. 7,388 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகத்துக்கு உள்ளேயே சமைப்பதற்கான வசதிகளுடன் காட்டேஜ் அமைக்கப்பட்டுள்ளது. ரியல் லயன்ஸ் க்ளப்!

இன்பாக்ஸ்

‘ஒடியன்’ ரிலீஸுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச்சில் வெளி வரவிருக்கிறது மோகன்லாலின் ‘லூசிஃபர்’. ஆனால், லாலேட்டன் ரசிகர்கள் 2020-க்காக அதி ஆவலோடு காத்திருக்கி றார்கள். பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணி இணையும் `மரக்கார் - அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்ற படத்திற்கா கத்தான் அந்த எதிர்பார்ப்பு. 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களை எதிர்த்துப் போரிட்ட கடற்படை அதிகாரி குஞ்ஞாலி மரக்கார் - IV பற்றிய பீரியட் ஃபிலிம்தான் இது. மஞ்சு வாரியார். சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், பிரபுதேவா, கீர்த்திசுரேஷ் என்று பெரும் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்தி ருக்கிறார்கள்.  சாபு சிரில் தலைமையில் பிரமாண்ட மான கப்பல்கள் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தயாராகிக் கொண்டி ருக்கின்றன. சரித்திரம் முக்கியம்!

இன்பாக்ஸ்

தெலுங்கு தேசத்து பொங்கல் ரிலீஸ்களில் என்.டி.ஆரின் பயோபிக்கான `NTR கதாநாயகுடு’, வெளியீட்டுக்கு முன் ஏக எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் வெங்கடேஷ் - வருண்தேஜ் நடிப்பில் வெளியான `F2 – Fun and Frustration’ படமும், ராம் சரண் நடித்த `வினய விதேய ராமா’ படமும் ரேஸில் முந்திக்கொண்டன. இதனால் என்.டி.ஆர் `பக்தர்களும்’ பாலையா ரசிகர்களும் ரொம்பவே அப்செட்!  மறுபடி ரயிலத்தூக்குங்க பாலையாகாரு!

இன்பாக்ஸ்

மிழ் சினிமாவில் தன் படங்கள் மூலம் அவ்வப்போது தலைகாட்டிவருகிறார் நடிகை ராய் லெட்சுமி . ‘ஜூலி 2’ படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்தவர், இப்போது மீண்டும் கோலிவுட்டில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ‘நீயா 2’, ‘சிண்ட்ரெல்லா’ படங்களைத் தொடர்ந்து புலியை மையமாக வைத்து எடுக்கப்படும் அனிமல் அட்வென்ச்சர் படத்தில் நடிக்கவுள்ளார். கவர்ச்சிப்புலி!

ருவழியாக மணிரத்னத்தின் ட்ரீம் புராஜக்ட் கிக் ஸ்டார்ட் ஆகிறது. எஸ்.... `பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு 2020 ஜனவரியில் தொடங்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. அரவிந்த் சாமி, விக்ரம், நானி ஆகியோருடன் சிம்புவும் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு லொகேஷன்களைத் தேடி இயக்குநர் குழு பயணிக்க, திரைக்கதையைப் பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கிறார் மணி! வந்தா வந்தியத்தேவனாத்தான் வருவேன்!