`ஆசையைக் கட்டுப்படுத்த தெரிஞ்ச ஒருத்தர் குடும்பத்தில் இருக்கணும்' - சேரனின் `திருமணம்' டிரெய்லர் | cherans thirumanam trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (26/01/2019)

கடைசி தொடர்பு:20:46 (26/01/2019)

`ஆசையைக் கட்டுப்படுத்த தெரிஞ்ச ஒருத்தர் குடும்பத்தில் இருக்கணும்' - சேரனின் `திருமணம்' டிரெய்லர்

இயக்குநர் சேரனின் `திருமணம் சில திருத்தங்களுடன்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

திருமணம்

'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்',  'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி',  'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் தனது 11-வது படைப்பாக  'திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிக்க காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

திருமணம்

இவர்களுடன் சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பாலசரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க இயக்குநர் சேரனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்டப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.

சேரன்

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. திருமணத்துக்கு முன்பு, திருமணத்தின் போது நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள், பிரச்னைகள் குறித்த காட்சிகள் எனச் சேரனின் `டச்' உடன் டிரெய்லர் வெளிவந்துள்ளது. பின்னணி இசை, காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதால் டிரெய்லர் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க