`அம்மாவுக்கு அப்புறம் நான்தான்னு பலபேர் நெனக்கிறாங்க!’ - வந்தா ராஜாவாதான் வருவேன் டிரெய்லர் | Vantha Rajavathaan Varuven Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/01/2019)

கடைசி தொடர்பு:08:21 (28/01/2019)

`அம்மாவுக்கு அப்புறம் நான்தான்னு பலபேர் நெனக்கிறாங்க!’ - வந்தா ராஜாவாதான் வருவேன் டிரெய்லர்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

வந்தா ராஜாவா தான் வருவேன்

செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவாதான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இப்படத்தில் மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள `எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு' என்ற பாடல் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.