கங்கனா ரனாவத் நடித்த ‘மணிகர்ணிகா’ படம் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்தின் கதையை எழுத, இப்படத்தை இயக்கத் தொடங்கியவர் க்ரிஷ். படவேலைகள் முடிவை நெருங்க, தனக்கும் இயக்குநர் க்ரிஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கங்கனா தானே படத்தை இயக்கி முடித்தார். இப்போது பட இயக்கத்துக்கு யார் பொறுப்பு என்ற விவாதம் வெடித்துள்ளது. இயக்குநர் க்ரிஷுக்கும், கங்கனாவின் சகோதரி ரங்கோலிக்கும் ட்விட்டரில் நடந்த காரசாரமான சண்டைதான் சென்றவார பாலிவுட் வைரல். போர்... ஆமாம்... போர்!

சிம்ரன் தனது மூன்றாவது இன்னிங்ஸை பக்காவாக டிசைன் செய்துவருகிறார். ‘பேட்ட’ படத்தில் த்ரிஷா தன்னுடன் நடிக்கவில்லை யென்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்கவுள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் அட்வென்சர் படத்தில் நடிக்கவுள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. ஸ்வீட் சாப்புடுவோம்!

ஈரான் எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூசாணி ஆஸ்திரேலிய நாட்டில் அடைக்கலம் தேடிய போது அவருக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்தது. அவர் மனு தீவில் தங்க வைக்கப்பட்டார், அங்கிருந்தபடியே பத்திரிகைகளுக்குக் கதை எழுதி வந்தார். மனு தீவில் தன்னுடைய அனுபவங்களை ‘No Friend But The Mountains’ எனப் புத்தகமாக எழுதி வெளியிட்டவருக்கு அடித்தது ‘ஜாக்பாட்.’ அந்தப் புத்தகத்துக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான விக்டோரியன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத்தொகை 1,25,000 டாலர். இதில் கொடுமை என்னவென்றால் ஆஸ்திரேலியா சென்று விருதை வாங்குவதற்கு அவருக்கு அனுமதியில்லை என்பதுதான். இலக்கியப் பாவம் சும்மா விடாது!

DC காமிக்ஸ் படங்களான ‘பேட்மேன் vs சூப்பர்மேன்: தி டான் ஆஃப் ஜஸ்டிஸ்’, ‘சூசைட் ஸ்குவாடு’, ‘ஜஸ்டிஸ் லீக்’ போன்ற படங்களில் பேட்மேனாக வலம் வந்த பென் அஃப்லெக் தற்போது பேட்மேன் ரசிகர்களைக் கவலையடையச் செய்திருக்கிறார். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பேட்மேன் ரீ-பூட்டில் தான் பேட்மேன் இல்லை என்று தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த பேட்மேன் படம் 2021-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய பேட்மேன் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ‘ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப் புகழ் மேட் ரீவ்ஸ் இயக்கும் இந்த பேட்மேன் படம் இளவயது பேட்மேன்/ப்ரூஸ் வெயின் கதை என்பதால்தான் பென் அதற்குச் சரியாகப் பொருந்த மாட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதை உணர்ந்தே பென் வெளியேறியிருப்பதாகவும் அறியப்படுகிறது. டாடா அஃப்லெக்!

இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணமதிப்புநீக்க நடவடிக்கைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 2017 தொடங்கி ஜூன் 2018 வரைக்குமான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வின்படி வேலைவாய்ப்பின்மை 6.1%ஆக உள்ளது. 1972-க்குப் பிறகு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உயர்ந்ததேயில்லை! வேலைவாய்ப்பை அதிகரிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசுக்கு இந்த ஆய்வு முடிவு தேர்தல் சமயத்தில் பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. பக்கோடா சுட வேண்டியதுதான்!

ஹாலிவுட் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களையும் அடிநாக்கு துடிக்கும்படி ‘ஓஓஓ’ எனக் கூச்சலிட்டுக் கொண்டாட வைத்த படம் `பொஹீமியன் ராப்சொடி.’ படத்தை ஆரம்பநிலையில் இயக்கிய ப்ரையன் சிங்கர், 90 சதவிகித படம் முடித்தபின் செட்டுக்கு வருவதில்லை என்ற காரணத்தால் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். உலகளவில் தற்போது இந்தப் படம் 81.7 கோடி டாலர் வசூல் அள்ளியதுடன், ஆஸ்கர் விருதுப் போட்டியில் ஸ்ட்ராங்காகக் குத்தவைத்து உட்கார்ந்திருக்கிறது. ஆஸ்கர் சமயத்தில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, படத்தைத் தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டுடியோ இயக்குநர் ப்ரையனுக்கு நான்கு கோடி டாலர் தொகையைக் கொடுக்கப் போகிறதாம். படைப்பாளிக்கு மரியாதை!

பாலிவுட் ஃபேஷன் சென்சேஷனல் சோனம் கபூர், தனது அடுத்த திரைப்படமான Ek Ladki Ko Dekha Toh Aisa Laga-வின் திரையிடலுக்கு, தமிழ் எழுத்துகள் பதிக்கப்பட்ட புடவை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பாலிவுட் பிரபலங்களின் சமீப காலத்து ஃபேவரிட் ஆடை வடிவமைப்பாளர், மஸாபா குப்தா. துணிச்சலான வித்தியாசப் படைப்புகளுக்குப் புகழ் பெற்ற இவர் தற்போது சோனம் கபூருக்கு, ‘மஸாபா’, ‘சோனம்’ மற்றும் ‘ஏக் லடக்கி கோ தேக்கா தொ ஏசா லகா’ ஆகிய வாக்கியங்களை ‘சாட்டின்’ புடவையிலும் ‘ஆர்கான்சா’ பிளவுஸிலும் பதித்து, தமிழக மக்களின் மனதையும் கொள்ளையடித்துள்ளார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ்... ஆங்!

முதல்முறையாக ஸ்ருதிஹாசனோடு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு படம் இயக்கவிருக்கும் எஸ்.பி.ஜனநாதன் படத்தில் இருவரும் நடிக்கிறார்கள். படத்தில் விஜய்சேதுபதிக்கு இரட்டைவேடம், இதுவும் முதல்முறைதான்! இன்னும் நிறைய முதல்முறைகள் இருக்கும் என்கிற படப்படிப்புக்குழு. படத்திற்கு லாபம் எனப் பேர் வைத்திருக்கிறார்களாம். பெருகட்டும்!

பாலிவுட் பியூட்டி பிரியங்கா சோப்ராவின் மூன்றாவது ஹாலிவுட் திரைப்படமான `Isn’t It Romantic?’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாகப்போகிறது. செத் கோர்டன் இயக்கத்தில், ‘பே வாட்ச்’ திரைப்படம் மூலம் ஹாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா. தற்போது டாட் ஸ்ட்ராஸ், ஸூல்சன் இயக்கத்தில் ரிபெல் வில்சனோடு இணைந்து, யோகா அம்பாஸடராக நடித்திருக்கும் திரைப்படம் இது. பிப்ரவரி 13-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் ரிலீஸாகவுள்ள இந்தத் திரைப்படத்தை, 28-ம் தேதிதான் இந்தியாவில் வெளியிடவிருக்கிறார்கள். இந்தியாவுக்கு எப்ப மேம் ரிட்டர்ன்!