வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே! - புதிய கூட்டணியுடன் அஜித் | Boney Kapoor announced the rest of the cast and crew of ajith's pink remake movie

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (28/01/2019)

கடைசி தொடர்பு:11:10 (28/01/2019)

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே! - புதிய கூட்டணியுடன் அஜித்

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்ற `பிங்க்' படத்தின் ரீமேக்கில்தான் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.  ஸ்ரீ தேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ,  ‘சதுரங்க வேட்டை’ படங்களை இயக்கிய ஹெச்.வினேத் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்துக்கான பூஜைகள் தொடங்கி அந்தப் புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அஜித் -வினோத்

தற்போது இந்தப் படம் தொடர்பாகப் பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர். அதில், “இங்கிஸ் விங்லிஸ் படத்தில் அஜித் நடித்த போதிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையேயான நட்பு தொடங்கியது. அப்போதிலிருந்தே தாய் மொழியான தமிழில் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என ஸ்ரீதேவியும் நானும் திட்டமிட்டிருந்தோம். எங்களின் விருப்பத்துக்கு அஜித்தும் சம்மதித்தார்.

ஸ்ரீதேவி - போனி கபூர்

ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சமூகத்துக்குத் தேவையான ஒரு படத்தை வழங்க வேண்டும் என முடிவெடுத்தோம். நாங்கள் தேர்ந்தெடுத்த கதையின் மீது ஸ்ரீதேவி அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரின் கனவை நனவாக்கும் முயற்சியில் படக் குழுவினர் அனைவரும் இணைந்துள்ளனர். 

வித்யா பாலன்

அஜித்துடனான இந்த நட்பு  ஒரு படத்துடன் நிற்காமல் நாங்கள் அடுத்த படத்திலும் இணையவுள்ளோம். நான் சினிமாக்களை அதிகம் விரும்புபவன் அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்கள் நம்பிக்கையோடு வர திறமையான டீம் வேண்டும் என விரும்பினேன். என் ஆசைபடியே அனைத்தும் நடந்துவருகிறது. அஜித் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார், திறமையான தனது நடிப்பின் மூலம் நாடு முழுவதும் ரசிகர்களைக் கொண்ட வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாகத் தமிழில் கால் பதிக்கவுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுத் சிதம்பரம், இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன், அபிராமி வெங்கடாசலம், சுஜித் சங்கர், பிங்க் படத்தில் நடித்த ஆண்டியா தரியாங் போன்ற பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு, கலை இயக்குநர் கே.கதிர், சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு பூர்ணிமா ராமசாமி, படத்தொகுப்பு கோகுல் சந்திரன். அஜித்தின் இந்த 59-வது படத்துக்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார். 
 


[X] Close

[X] Close