``டிவிடி கேட்டார் டி.டி.வி" - `கிரேஸி' மோகன் கலகல! | crazy mohan shares about the meeting with ttv dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (28/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (28/01/2019)

``டிவிடி கேட்டார் டி.டி.வி" - `கிரேஸி' மோகன் கலகல!

வசனகர்த்தாவும் நடிகருமான `கிரேஸி' மோகன் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இது குறித்து அவரை தொடர்புகொண்டோம். 

கிரேஸி மோகன்

அப்போது பேசியவர், ``இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். என்னோட டிராமா டிவிடி வேணும்னு என் நண்பர் ஒருவரிடம் கேட்டிருந்தார், டிடிவி தினகரன். இதை என் நண்பர் என்னிடம் சொன்னார். சரி, நானே அவரை சந்தித்து அந்த டிவிடியை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அதில் என்னுடைய அனைத்து டிராமாக்களின் வீடியோவும் இருக்கும். என்னைப் பார்த்தவர், `இருபது வருஷத்துக்கு முன்னாடி உங்க டிராமாக்களை தியேட்டருக்கு வந்து பார்த்திருக்கிறேன். உங்களுடைய ஹியூமர் சென்ஸும், டயலாக்ஸும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதான் டிராமா டிவிடி கேட்டேன்'னு சொன்னார். படங்கள் பத்திதான் பேசினார். உங்க பஞ்சதந்திரம் திரைப்படம் ரொம்பப் பிடிக்கும்ன்னு சொன்னார். ஒரு 15 நிமிடம் பேசினோம். மத்தபடி அரசியல் எதுவும் பேசலை. இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்புதான்" என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க