'இது லேடி சூப்பர் ஸ்டார் கதை மட்டுமே!' - ‘ஶ்ரீதேவி பங்களா’-வுக்கு ப்ரியா வாரியர் விளக்கம் | Actress priya warrier says about movie 'sridevi bangala'

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (28/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (28/01/2019)

'இது லேடி சூப்பர் ஸ்டார் கதை மட்டுமே!' - ‘ஶ்ரீதேவி பங்களா’-வுக்கு ப்ரியா வாரியர் விளக்கம்

'ஒரு அடார் லவ்' படத்தில் வரும் ஒரு காட்சியின் மூலம், தமிழ்நாட்டில் ஃபேமஸானவர் நடிகை ப்ரியா வாரியர். இவரது நடிப்பில் விரைவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ப்ரியா வாரியர் நடிப்பில் 'ஶ்ரீதேவி பங்களா' என்கிற இந்தி படத்தின் டீசர், சில நாள்களுக்கு முன்பு வெளியானது. டீசரைப் பார்த்த பலரும் இந்தப் படம் நடிகை ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு போல உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, ஶ்ரீதேவி குளியலறையில் இறந்துகிடப்பது போன்ற காட்சி ஒன்றை டீசரிலும் வைத்திருந்தனர். இதனால், இந்தக் காட்சி, ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறுதான் எனப் பலரும் கூறியது உறுதிப்படுத்தியது. 

ப்ரியா வாரியர்

இந்தப் படத்தின் டீசர் குறித்து ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறும்போது, 'இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன்' என்று கோபமாகத் தெரிவித்திருந்தார். மேலும், இவரது மகள் ஜான்வி கபூரிடம் இதைப் பற்றி கேட்டப்போதும்கூட கருத்து எதுவும் தெரிவிக்காமல் கோபமாகச் சென்றுவிட்டார். 

இதுகுறித்து படத்தின் நாயகி ப்ரியா வாரியரிடம் கேட்டபோது, ''இந்தப்  படம், ஶ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இல்லை. படம் ரிலீஸான பிறகு அது தெரியும். இது ஒரு லேடி சூப்பர் ஸ்டார் கதை மட்டுமே என்றார். மேலும், படத்துக்கான ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. படத்துக்கான டீசர் வெளியீடுக்காக மட்டுமே சில காட்சிகளை  லண்டனில் படமாக்கினோம்''என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க