’நான் வாசிக்கக்கூடாதுனு சொல்றதுக்கு நீ யார்..?’ - சர்வம் தாள மயம் டிரெய்லர் | Sarvam thaala mayam movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:13 (28/01/2019)

’நான் வாசிக்கக்கூடாதுனு சொல்றதுக்கு நீ யார்..?’ - சர்வம் தாள மயம் டிரெய்லர்

’மின்சாரகனவு’, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் ’சர்வம் தாள மயம்’. ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு டிடி, வினித், குமரவேல் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சர்வம் தாள மயம்

டிசம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம், பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகயிருக்கிறது. மிருதங்கத்தை உற்பத்தி செய்கிற குடும்பத்தில் இருந்து ஒரு பையன் எப்படி இசைக்கலைஞராக மாறுகிறார் என்பதே படத்தின் கரு. ’மின்சாரகனவு’, ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மறுபடியும் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் பாடல்கள் மீதும் பின்னணி இசை மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், பின்னணி இசையை கேட்பதற்கு ரசிகர்கள் வெயிட்டிங். இந்தப் படத்தில் ’வரலாமா உன் அருகில்...’ என்கிற பாடலை மட்டும் ராஜீவ் மேனன் இசையமைத்திருக்கிறார்.

 

 

 

தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார்.