மாதவனின் `நம்பி’ லுக்குக்கு குவியும் மீம்ஸ்கள் | Madhavan's look in Rocketry: The Nambi Effect becomes meme template

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (28/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (28/01/2019)

மாதவனின் `நம்பி’ லுக்குக்கு குவியும் மீம்ஸ்கள்

மீம் கிரியேட்டர்கள், மாதவனின் இயல்பான தோற்றத்தையும், 'நம்பி'யாக மாறிய தோற்றத்தையும் கொலாஜ் செய்து, பல மீம்களைப் பதிவுசெய்கிறார்கள்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படம்,  'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'டுக்காக வயதான தோற்றத்துக்கு மாறியிருக்கும் மாதவன்தான், இன்றைய மீம்களின் டெம்ப்ளேட். குறைந்தது 14 மணிநேரமாவது செலவுசெய்து போடப்படும் இந்த மேக்கப் செஷனின் படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

மாதவன்

அப்படியே, ஒரு 80 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்த அவரின் படம், உடனே வைரலானது. ரசிகர்களின் கமென்ட்டுகளும் குவிந்த வண்ணம் இருந்தன. இது ஒருபுறம் இருக்க, மீம் கிரியேட்டர்களுக்கும் இந்தப் படம் கண்டன்ட்டாக மாறியது. மாதவனின் இயல்பான தோற்றத்தையும், நம்பியாக மாறிய தோற்றத்தையும் கொலாஜ் செய்து, பல மீம்களை அவர்கள் பதிவுசெய்கின்றார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலத்தில், நம்பியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகிவரும் இப்படத்தை முதலில் மாதவனும், அனந்த் மகாதேவனும் இணைந்து இயக்குவதாக இருந்தது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் தவிர்க்கமுடியாத காரணங்களால் படத்திலிருந்து தான் விலகுவதாக அனந்த் அறிவித்தார். அதனால், படத்தை மாதவன் தனியாக இயக்கவிருக்கிறார்.

மாதவன்

தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகிவரும் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.