கேக் ஊட்டிய இயக்குநர் சுசீந்திரன்... காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகர் சூரி! #10YearsOfVennilaKabadiKuzhu | suseenthiran celebrated his ten year of cinema journey

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (29/01/2019)

கேக் ஊட்டிய இயக்குநர் சுசீந்திரன்... காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகர் சூரி! #10YearsOfVennilaKabadiKuzhu

`வெண்ணிலா கபடிக்குழு’ படம் 2009, ஜனவரி 29-ம் தேதி வெளியானது. இந்தப் படம் மூலமாக சுசீந்திரன் இயக்குநராக அறிமுகமானார். தவிர, விஷ்ணு விஷால் உட்பட பல நடிகர்களுக்கும் டெக்னீஷியன்களும் இதுதான் முதல் படம். கபடியை மையப்படுத்தி வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூரி இதற்கு முன் சில படங்களில் ஆங்காங்கே தோன்றி இருந்தாலும் இந்தப் படம்தான் அவரை மக்களுக்கு பரிச்சயமாக்கியது.  

சுசீந்திரன்

இந்தப் படத்துக்குப் பிறகு, `நான் மகான் அல்ல’, `அழகர்சாமியின் குதிரை’, `பாண்டியநாடு’, `ஜீவா’, `மாவீரன் கிட்டு’ என 11 படங்களை இயக்கியுள்ளார். `ஏஞ்சலினா’, `சாம்பியன்’ ஆகிய படங்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது `கென்னடி கிளப்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இன்றோடு சினிமாவில் 10 வருடம் நிறைவு செய்ததை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது சுசீந்திரனின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினார் நடிகர் சூரி.      

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க