Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்ரனும் த்ரிஷாவும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருக்கும் பெண்களை மையமாகக் கொண்ட படத்தில் இருவரும் நாயகிகளாக நடிக்கவிருக்கிறார்கள்.  இது ஆக்‌ஷன் படமாகவும் இருக்குமாம். `ஜோடி’ ஜோடி!

இன்பாக்ஸ்

கோலிவுட், பாலிவுட் என இரண்டு ஏரியாக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் பிரபுதேவா. சல்மான்கானை வைத்து ‘தபாங் 2’ படத்தை இயக்கும் முயற்சிகளிலும் இருக்கிறார். தமிழில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துவிட்டார். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஐந்து ஜோடிகளாம். அதற்கு அடுத்து யங்மங்சங், தேவி-2, பொன்மாணிக்கவேல், ஊமைவிழிகள் என நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிஸிதேவா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பவர்களுக்குப் பத்து லட்சம் அபராதமும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கும் சட்டத் திருத்தம் ஒன்றை முன்னெடுக்கும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு. சென்ற வாரம் மோடியுடன் நடந்த யூனியன் கேபினட் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் ‘`பைரஸியால் பாதிக்கப்பட்டுவரும் சினிமாத்துறையை மீட்டெடுக்க இந்தச் சட்டம் உதவும்’’ என்று கூறியுள்ளார்.  தமிழ்ராக்கர்ஸ புடிச்சா போதுமே!

இன்பாக்ஸ்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட, முப்பது வயதிற்குள் சாதனை படைத்த முப்பது பேர் (ஃபோர்ப்ஸ் 30 அன்டர் 30) பட்டியலில் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்திருந்தார். இதையடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “என் 25வது வயதில் வங்கியில் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் செய்ய முடியாதவனாக இருந்தேன். அப்பா சொன்னார், `30 வயதிற்குள் செட்டில் ஆகிவிடு, அப்போதுதான் வெற்றியை இளமை இருக்கும்போதே கொண்டாட முடியும்’ என்று. இதோ நான்காண்டுகளில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் வந்துவிட்டேன்’’ என்று எழுதியிருந்தார். இதைப் படித்த இயக்குநர் மோகன்ராஜா ‘`இந்த ட்வீட்டை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை ஒன்றை எழுதப்போகிறேன். விஜய், நீங்க காப்பிரைட்ஸ் கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன்’’ எனச் சொல்ல... விஜய் தேவரகொண்டாவும் மகிழ்ச்சியோடு சம்மதம் சொல்லியிருக்கிறார். சக்ஸஸ் ரெட்டி!

இன்பாக்ஸ்

‘இந்த உலகத்தில் ஒரேமாதிரி ஏழு பேரு இருப்பாங்களாம்’ என்ற 90-s கிட்ஸ்களின் நம்பிக்கைக்கு வலுச்சேர்த்தார் அனுஷ்கா சர்மா. கடந்த வாரம், அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான ஜூலியா மைக்கேல்ஸ் தன் இளம் வயதுப் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அனுஷ்கா ஷர்மா பொன்னிற ‘டை’ அடித்துவிட்டாரோ... என்ற கேள்வியோடு அனுஷ்காவையும் டேக் செய்திருக்கின்றனர். அப்போது ஜூலியா-அனுஷ்கா இணைந்த புகைப்படம் பார்த்த அனுஷ்காவுக்கு ‘ஷாக்’. “நம்மைப்போல் இருக்கும் மேலும் ஐந்து பேரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டு அசத்தினார் அனுஷ்கா.  என்னைப்போல் ஒருத்தி!

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை வாக்காளர்களை நேரடியாகச் சென்றடைய வாட்ஸ் அப் முக்கியமான கருவியாக இருக்கப்போகிறது. இந்த முறை தேர்தலில் மிக அதிக வதந்திகள் மற்றும் அவதூறுகள் பரப்புகிற ஆயுதமாகவும் அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘`தேர்தலில் வாட்ஸ் அப் வழி அவதூறுகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் எல்லா முயற்சிகளையும் எடுக்கவுள்ளோம். பல பெரிய கட்சிகளும் இதைச் செய்துவருகின்றன என்றாலும், எங்கள் தரப்பிலிருந்து இதைக் கட்டுப்படுத்தும் வழிகளை மேற்கொண்டு வருகிறோம்!’’ என்று தெரிவித்திருக்கிறார் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமைத் தகவல்தொடர்பு அலுவலரான காரல் வூக். அப்ப ‘அவங்க’ள்லாம் என்ன பண்ணுவாங்க!?  

இன்பாக்ஸ்

ஹாலிவுட்டின் ‘ஹிட்-ஹாட்’ நடிகை ஜெனிபர் லாரன்ஸுக்கு நிச்சயதார்த்தமானதில் சோக வயலின் வாசிக்கிறார்கள் அவரின் டைஹார்ட் ஃபேன்ஸ்.  ஆர்ட் கேலரி ஒன்றின் உரிமையாளரான குக் மரோனிதான் ஜெனியின் மணாளன். கடந்த எட்டு மாதங்களாக ஜோடியாகச் சுற்றிவந்த ஜெனி - குக் இணை, தங்களுக்கு நிச்சயமானதை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர். சோ சேட்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism