`உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது!’ - `சர்வம் தாள மயம்’ படத்துக்காக சித்தார்த்திடம் மன்னிப்புக் கேட்ட பிரபலம் | bollywood celebrity apoligies to siddharth

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (31/01/2019)

கடைசி தொடர்பு:19:41 (31/01/2019)

`உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது!’ - `சர்வம் தாள மயம்’ படத்துக்காக சித்தார்த்திடம் மன்னிப்புக் கேட்ட பிரபலம்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் `சர்வம் தாள மயம்' படம் நாளை (பிப்ரவரி1) திரைக்கு வரவிருக்கிறது.

சித்தார்த்

அப்படத்தை பாலிவுட்டின் பாடலாசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான ஜாவத் அக்தர் பார்த்துவிட்டு, ``சர்வம் தாள மயம் படம் பார்த்தேன். அருமையான படம். இசையைப் பற்றி வழக்கமான படமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துகள்’’ என பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில் `சர்வம் தாள மயம்’ என்பதை பிழையுடன் எழுதியிருந்தார். இதனை ரீ ட்வீட் செய்திருந்த நடிகர் சித்தார்த், அதை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஜாவத் அக்தர்

அதற்குப் பதிலளித்துள்ள ஜாவத் அக்தர், ``டியர் சித்தார்த், உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. இந்தியையும் உருதையும் யாராவது தவறாகப் பயன்படுத்தும்போது எனக்கு இந்த உணர்வுதான் இருக்கும். இதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தண்டனையாக இப்படத்தின் பெயரை நான் மீண்டும் சரியாக எழுதுகிறேன்’’ என்றவர் `சர்வம் தாள மயம்’ என மூன்று முறை எழுதி ட்வீட் செய்துள்ளார். இதை டேக் செய்த சித்தார்த், `ஹாஹாஹா! எபிக் சார்’ எனக் கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.   

ஜாவத் அக்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க