`மனசை வலிமையாக்க தனிமையால்தானே முடியும்!’ - கார்த்தியின் `தேவ்' டிரெய்லர் | actor surya released karthi's dev trailer

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:27 (31/01/2019)

`மனசை வலிமையாக்க தனிமையால்தானே முடியும்!’ - கார்த்தியின் `தேவ்' டிரெய்லர்

`கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இமாச்சலப்பிரதேசம், ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 

கார்த்தி

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தவிர, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், `ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளனர். இப்படத்தில் கார்த்தியும் ரகுல் ப்ரீத்சிங்கும் மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் உள்ளனர். தவிர, நிக்கி கல்ராணி கெமியோ ரோலில் நடித்துள்ளார். பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. தற்போது, `மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோயின் இல்லாத ஒரு ஆக்‌ஷன் கதையில் கார்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க