Published:Updated:

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!
பிரீமியம் ஸ்டோரி
திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!
பிரீமியம் ஸ்டோரி
திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!
திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ந்து முதல் பத்து ஆண்டுகள் உழைத்து, அனுபவங்களை எல்லாம் சேர்த்து தன் முதல் படத்துக்கான கதையை எழுதுகிறார், ஓர் உதவி இயக்குநர். பின், அதைப் பெரிதாக யோசித்து, பலருடன் ஆலோசித்து பல கஷ்டங்களுக்குப் பிறகு முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்கிறார். பிறகு ஒரு ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ நேரம் வாங்கி அந்தக் கதையைச் சொல்லி, எப்போது அழைப்பு வரும் எனக் காத்துக்கொண்டிருக்கிறார். தனது எதிர்காலத்துக்கான காத்திருப்பு அது. அந்த நேரத்தில், இன்னொரு பெரிய டைரக்டரின் படத்திலோ, அதன் முன்னோட்டத்திலோ இவரது ஸ்கிரிப்ட்டில் உள்ள அதே காட்சிகள் இடம்பெற்றால் எப்படி இருக்கும் அவரது நிலைமை? திருடப்பட்டது கதை மட்டுமல்ல... அவரது எதிர்காலமும்தான்!

சென்ற ஆண்டு மட்டும் ‘சர்கார்’, ‘96’ என்று இரண்டு படங்கள், கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின. இரண்டுமே 2018-ம் ஆண்டில் மிக முக்கியமான படங்கள். இவை தவிர, ‘தசாவதாரம்’, ‘கத்தி’, ‘மெட்ராஸ்’ எனப் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதை வெளியே சொன்னதால், சினிமாவிலிருந்து ஓரம்கட்டப்பட்டு காணாமல்போன உதவி இயக்குநர்கள் பலர் கோலிவுட்டில் உள்ளனர். இந்த வரிசையில் வெற்றிபெற்ற ஒரேநபர் வருண் ராஜேந்திரன் மட்டுமே. ‘சர்கார்’ படம், தனது ‘செங்கோல்’ கதையைப்போலவே இருக்கிறது என்று துணிச்சலாக வழக்குப்போட்டு, இறுதிவரை போராடி வெற்றிபெற்றார்.

சென்ற ஆண்டு வெளியான ‘96’ படத்தின் கதை, தான் 2012-ம் ஆண்டில் எழுதி விரைவில் உருவாக்கவிருந்த ‘பால்பாண்டி என்கிற பாரதி’ படத்தின் கதைதான் என பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் சொல்லியிருந்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் முதலில் அந்தப் படம் உருவாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பின், தானே அதை ‘நீ நான் மழை இளையராஜா’ என்ற பெயரில் படமாக்கலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறினார். இயக்குநர் மருதுபாண்டியன் மூலம் கதை திருடப்பட்டு, ‘96’ படம் வெளியாகிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். ‘சர்கார்’ போல நீதிமன்றம்வரை செல்லாமல், பத்திரிகைச் செய்தியாக மட்டும் இது விவகாரம் அந்தச் சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

வருண் ராஜேந்திரனின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்பட்டது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜின் நிலைப்பாடுதான்.

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இறுதிவரை இருந்த மன உறுதிதான் என் வெற்றிக்குக் காரணம். அதையும்கூட ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான் செய்தேன். இங்கே அடிப்படையில் பல தவறுகள் இருந்தன. அதில், பலவற்றுக்கு என் வழக்கின் தீர்ப்பு ஒரு தீர்வாக மாறியது. முன்புபோல் இல்லாமல் இப்போது கண்டிப்பான பல விதிமுறைகள் எழுத்தாளர் சங்கத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பிரச்னைக்குப் பின்பு, 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்தில் சேர்ந்துள்ளனர். அதேபோல நிறைய கதைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன” என்கிறார் வருண். “கதையைப் பதிவுசெய்துவிட்டாலே, அது பாதுகாப்பாகி விடுமா?” என்ற கேள்விக்கு, “அது, நமக்கு ஓர் ஆதாரம்தான். அது, சரியாக இருந்ததால்தான் என்னால் வழக்கில் வெற்றியடைய முடிந்தது. பாக்யராஜ் சாரும் அதன் அடிப்படையில்தான் எனக்குப் பக்கபலமாக இருந்தார்” என்று கூறும் வருண், “இப்போதுள்ள பல உதவி இயக்குநர்களுக்கு இதுபோன்ற அடிப்படை விதிமுறைகள் தெரியாமல் இருப்பதுதான், அவர்கள் கதை எளிதாகத் திருடப்படுவதற்குக் காரணம்” என்று விளக்குகிறார்.

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

வருண் கூறியதுபோல் ‘சர்கார்’ சர்ச்சைக்குப் பிறகு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அச்சங்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான இயக்குநர் பேரரசு, “சங்கம் முன்புபோல் இல்லை. முன்பெல்லாம் மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று கதைகள்தான் பதிவாகும். ஆனால், இப்போது வாரத்துக்குக் குறைந்தது பத்து கதைகளாவது பதிவாகின்றன. அதனால், கதைப் பதிவுக்காகவே ஒரு தனிக் குழு அமைத்துள்ளோம்” என்கிறார். கதைத் திருட்டைத் தடுக்க என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார். “கொஞ்சம் கெடுபிடிகள் கொண்டுவந்துள்ளோம். உதாரணத்துக்கு கதைகளைப் பதிந்தவுடன், அதை ‘சீல்’ வைத்துவிடுவோம். ஒருவேளை, அதைப் பதிந்தவர் வேறோர் இயக்குநர் மீது குற்றம்சாட்டினால், அப்போதுதான் அந்த ‘சீல்’ பிரித்துப் பார்க்கப்படும். ஒருவேளை, இரண்டு கதைகளும் ஒன்றாக இருந்தால், உடனே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு என்ன ஈடுகட்டவேண்டும் என்பது அதன் பின்னரே முடிவெடுக்கப்படும்” என்றார்.

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

அதேவேளையில், சில இயக்குநர்களின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்பதற்காகவே பொய்க் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறதாகவும், அதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றும் பேரரசு கூறுகிறார். “கதைத் திருட்டு குற்றச்சாட்டைப் பதிய, டெபாசிட்டாக முதலில் ரூ.10,000 சங்கத்தில் கட்டப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணம் திருப்பித்தரப்படும். இல்லையென்றால், சங்கத்தின் கணக்கில் சேரும். ஒரு கதை தன்னுடையதுதான் என முழுவதுமாக நம்பும் பட்சத்திலோ, எல்லா ஆதாரங்களும் இருந்தாலோதான் புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு” என்கிறார் பேரரசு.

“நம்பிக்கையான நட்பு வட்டாரம் என்று நம்பிதான், கதையைச் சிலரிடம் பகிர்ந்துகொள்கிறோம். அவர்களே வேற ஏதாவது படத்தின் கதை டிஸ்கஷனுக்குப் போகும்போது, தெரிந்தோ தெரியாமலோகூட அதை அங்குச் சொல்லிவிடுகிறார்கள். இங்க நடக்கும் பல கதைத் திருட்டுகள் தெரியாமல் நடக்கும் கதைக் கசிவுகள்தான்” என்று சொல்கிறார் இயக்குநர் கோகுலின் உதவியாளர், அமீர். “சில சமயம் ஏதோ ஒரு படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது நாம் எழுதிய சீன்போலவே இருக்கும். இன்னும் சிலருக்குத் தங்களது கதைதான் திருடப்பட்டிருக்கிறது என்றுகூடத் தெரியாத அளவுக்கு காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்” என்றார் அமீர்.

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரனின் உதவியாளர் அனு சத்யா, “ஒரு கதையைப் பதிவு செய்வதற்கு முன்பே அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன. முதலில் கதையின் ஸ்கிரிப்டை நமக்கு நாமே இ-மெயில் அனுப்பலாம். அதேபோல நமக்கு நாமே பதிவுத் தபாலும் அனுப்பிக்கொள்ளலாம். யாரிடம் கதையைப் பகிர்ந்துகொள்கிறோம், உடன் யாரெல்லாம் இருக்கின்றனர், கதை வெளியே போக வாய்ப்பிருக்கிறதா என்று தெரிந்துகொண்ட பின்பு, கதையைச் சொல்வது நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாகக் கதையைக் கேட்பவர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை தர்மம் இருக்க வேண்டும். ஏனெனில், திருடப்படுவது கதை மட்டுமல்ல, அந்த இயக்குநரின் எதிர்கால வாழ்க்கையும்தான்” என்கிறார்.

மிக மிக உண்மை!

- சந்தோஷ் மாதேவன்

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

பாதிக்கப்பட்ட முதல் நபர் டி.ஆர்.!

தையைத் திருடுவது ஒரு வகை. மொத்தமாகப் படத்தையே, ‘ஆட்டையை’ப் போடுவது இன்னொரு வகை. இதில், அந்தக் காலத்திலேயே பாதிக்கப்பட்டவர் டி.ராஜேந்தர். 1980-ம் ஆண்டு வெளியான இவரது முதல் படமான, ‘ஒருதலை ராகம்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லா வேலைகளையும் செய்தவர் டி.ராஜேந்தர். ஆனால், இயக்கம் இ.எம்.இப்ராஹிம் ராவுத்தர் என்றுதான் டைட்டில் கார்டு சொன்னது. அப்போது டி.ஆரின் இயற்பெயர் ராஜேந்திரன். மூலக்கதை, பாடல்கள், இசை ஆகியவை மட்டுமே இவருடையது என்று அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் போட்டனர். படம் வெளியாகி, நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி, வசூலை அள்ளவே... கவனிக்கப்படும் நபராக மாறினார் டி.ராஜேந்தர். ‘ஒரு தலை ராகம்’ படத்தை இயக்கியதே இவர்தான் என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. அதை நிரூபித்தது இவரது இரண்டாவது படமான ‘வசந்த அழைப்புகள்’. அதன்பிறகுதான், தொடர்ந்து வெற்றிப் படைப்புகளைக் கொடுத்தார் டி.ஆர்.!

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

சர்ச்சையில் சிக்கிய பா.இரஞ்சித், ஏ.ஆர்.முருகதாஸ்

2014
-ம் ஆண்டில், பா.இரஞ்சித் இயக்கி வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் கதை உரிமை, சர்ச்சையைக் கிளப்பியது. அது, ‘‘கறுப்பர் நகரம் - என்கிற பெயரில் நான் எழுதிய கதையே...’’ என்று உரிமை கோரினார் கோபி நயினார். இந்த விஷயம் தொடர்பாக, அரசியல்வாதிகள்வரை தலையிட்டு, பா.இரஞ்சித் மற்றும் கோபி நயினார் இடையே சமரசம் செய்ய முயன்றனர். அதே ஆண்டில், விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான ‘கத்தி’ படத்தின் கதை உரிமையும் சிக்கலைக் கிளப்பியது. ‘‘இது என் கதை. என்னிடம் கதை கேட்டவர்கள், அதைத் திருடி ‘கத்தி’ என்று படமாக்கிவிட்டார்கள்’’ என்று கோபி நயினார் புகார் கிளப்பினார். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இதை முற்றாக மறுத்தார். இப்படி அடுத்தடுத்து இரண்டு முக்கியமான படங்களின் கதைகளுக்கு உரிமை கொண்டாடிய கோபி நயினாரை, அன்றைய திரையுலகமும் ரசிகர்களும்  கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், 2017-ம் ஆண்டு நயன்தாராவின் நடிப்பில் இவர் இயக்கிய ‘அறம்’, இவரது திறமையை உணர்த்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism