`அடிச்சிக்கோ, நாம உலகத்தைக் காப்பாத்த போறோம்!’ - `ஹாப்ஸ் அண்ட் ஷா' டிரெய்லர் | Hobbs & Shaw trailer: Dwayne Johnson, Jason Statham , Idris Elba in Fast & Furious spin-off

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (02/02/2019)

`அடிச்சிக்கோ, நாம உலகத்தைக் காப்பாத்த போறோம்!’ - `ஹாப்ஸ் அண்ட் ஷா' டிரெய்லர்

ஹாலிவுட்டில் தயாராகி பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட்டானப்  படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்' சீரிஸ். இதுவரை 8 பாகங்கள் வெளிவந்துள்ளன. படத்தின் பிரதானக் கதாபாத்திரங்களில் முக்கியமான இருவர் லூக் ஹாப்ஸ் (ட்வைன் ஜான்ஸன்), டெக்கார்ட் ஷா (ஜேசன் ஸ்டேட்த்தம்) ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட  `ஹாப்ஸ் அண்ட் ஷா’ ஸ்பின் ஆஃப் படமாகத் தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. டெட் பூல் 2 படத்தின் இயக்குநர் டேவிட் லீட்ச் இப்படத்தை இயக்கி வருகிறார்.

ஹாப்ஸ் அண்ட் ஷா

உலகத்தை அழிக்க வரும் புல்லட் ப்ரூஃப், சூப்பர் ஹியூமன் வில்லனாக ப்ரிக்ஸ்டன் கதாபாத்திரத்தில் தார், அவெஞ்சர்ஸ் கதாபாத்திரத்தில்  இத்ரிஸ் எல்பா. இப்படத் தயாரிப்பில் இருந்ததால்  ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியுரியஸ்' சீரிஸ் படத்தின் ஒன்பதாம் பாகம் தாமதமாகத் தயாராகிவருகிறது. ஹாலிவுட்டின் படு கமர்ஷியலான 'ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியுரியஸ்' படத்தின் முத்ல் ஸ்பின் ஆஃப் படமாக `ஹாப்ஸ் அண்ட் ஷா’ ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.