`ஆர்யாவிடம் இனிதான் அதப்பத்தி கேக்கணும்!’ - சந்தானம் நகைச்சுவை பதில் | Actor Santhanam speaks at Dhillukku Dhuddu 2 press meet

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (02/02/2019)

கடைசி தொடர்பு:16:55 (02/02/2019)

`ஆர்யாவிடம் இனிதான் அதப்பத்தி கேக்கணும்!’ - சந்தானம் நகைச்சுவை பதில்

’நான் இயக்குநரானால், ஆர்யாவை வைத்துப் படம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது’ என இன்று நடந்த `தில்லுக்கு துட்டு - 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர், "முதல்ல காமெடியனா இருந்தேன். அப்புறம் தயாரிப்பாளரானேன். இப்போ ஹீரோ. ஒரே டிராக்ல போகவேண்டிய அவசியம் இல்லையே. நிறைய விஷயத்த முயற்சி பண்ணிப்பார்க்கணும். அந்த வரிசையில் அடுத்து, டைரக்டர் தான். எந்த ஜானர்னு இன்னும் முடிவு பண்ணலை. ஆனா ஆக்‌ஷன், காமெடினு எதுவா இருந்தாலும் கண்டிப்பா நல்ல படமாதான் எடுப்பேன். அதுல உறுதியா இருக்கேன்" எனக் கூறினார்.

சந்தானம்

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், ’உங்கள் படங்களில் காமெடியனை ஹீரோவாக்குவீர்களா’ எனக் கேட்டபோது, "அப்படி எதுவும் முடிவு பண்ணல. கதை எப்படி அமையுதோ, அதுக்கு யார் செட்டாவாங்களோ அவங்கதான். அப்படி யாரையாவது வச்சு படம் பண்ணணும்னா ஆர்யா தான் என் சாய்ஸ்" என்றார்.

ஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியைப் பற்றி கேட்டபோது, "அது உண்மைதானான்னு எனக்குத் தெரியல. அவன்கிட்ட இனிதான் அதப்பத்தி கேக்கணும். ஆனா, கல்யாணம் ஆகுற வயசு வந்துட்டா பண்ணிதான ஆகணும்" என நக்கலாகச் சொன்னார்.

தீபக் ஒளிப்பதிவிலும், சபீர் இசையிலும் உருவாகியிருக்கும் தில்லுக்கு துட்டு - 2ல் ஹீரோயின் ஷ்ரித்தா ஶ்ரீநிவாஸ் மற்றும் நடிகர்கள் ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், பிபின் ஆகியோர் நடித்துள்ளனர்.