திருமணத்துக்கு ரெடியாகும் தீபிகா படுகோனின் முன்னாள் காதலர்! | deepika padukone's ex boy friend will get married soon

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:18:40 (02/02/2019)

திருமணத்துக்கு ரெடியாகும் தீபிகா படுகோனின் முன்னாள் காதலர்!

சில வருடங்களுக்கு முன் நடிகை தீபிகா படுகோன், நிஹார் பாண்டியா என்பவரைக் காதலித்துவருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கோலாகலமாக சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவரது முன்னாள் காதலர் நிஹார் பாண்டியாவுக்கு பாடகி நீத்தி மோகனுடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. 

நீது மோகன் - நிஹார் பாண்ட்யா


சமீபத்தில், இவர்கள் இருவரும் தனியார் சேனலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, இருவருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளனர். அப்போது பேசிய நிஹார், "நாங்க ரெண்டு பேரும் முதன்முதலில் சந்திச்சு பேசுறதுக்கு முன்னாடியே எனக்கு நீத்தி மேல காதல் வந்துடுச்சு. நீத்தியின் 'ஆஸ்மா' பேன்ட்ல என் தோழி இருந்தாள். நான் அவள்கிட்ட நீத்தியை அறிமுகப்படுத்திவைக்கணும்னு சொன்னேன். ஆனா, அது நடக்கலை. என் தோழியின் கல்யாணத்துக்கு வந்திருந்த நீத்திகிட்ட போய் பேசினேன். அப்படி ஆரம்பிச்ச உறவு, இப்போ அவங்களுக்கும் என் மேல காதல் வர வெச்சிருக்கு" என்றார்.

பாலிவுட் மாடலான இவர், கங்கணா ரணாவத் நடித்திருக்கும் 'மணிகர்ணிகா' படத்திலும் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நீத்தி மோகன் பாடிய பாடல்கள் பாப்புலரானவை.
வாழ்த்துகள் நிஹார் - நீத்தி!   

நீங்க எப்படி பீல் பண்றீங்க