கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பு -கன்னடத்தில் டப் செய்யப்படும் விஸ்வாசம்! | ajith's viswasam movie dubbing in Karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/02/2019)

கடைசி தொடர்பு:16:00 (03/02/2019)

கர்நாடகாவில் கிடைத்த வரவேற்பு -கன்னடத்தில் டப் செய்யப்படும் விஸ்வாசம்!

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த 'விஸ்வாசம்' திரைப்படம், கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்ட இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரியவர், சிறார் என வயது வரம்பின்றி குடும்ப குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

விஸ்வாசம்

கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ்மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம், நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் கர்நாடகா விநியோகஸ்த உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து 'ஜகா மல்லா' என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

ஜகா மல்லா \ jaga malla

படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட மக்களையும் இப்படம் ஈர்க்கக் கூடும் என்பதால் படத்தை டப் செய்து வெளியிட எண்ணத்தில் படத்தை டப் செய்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஓரிரு வருடங்களாகவே கர்நாடகாவில் வெளி மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.