`96’ இயக்குநருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸ்! | director premkumar's cat love and vijay sethupathy's gift

வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (04/02/2019)

கடைசி தொடர்பு:08:35 (04/02/2019)

`96’ இயக்குநருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸ்!

விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு காதலர் தினம் கொண்டாட வைத்த படம் '96'.  த்ரிஷாவுக்கு  இப்படத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதிக்கு நல்ல ஒரு படமாகவும் அமைந்தது. படத்தின் இயக்குநர் பிரேம்குமார்  `96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இறங்கிவிட்டார். ஷர்வானந்த், சமந்தா இப்படத்தில் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி கொடுத்த பைக்குடன் பிரேம் குமார்

ஒளிப்பதிவாளரான பிரேம் இயக்கத்தில் ஆர்வம் இருந்ததுபோல் கிளாசிக் டூவீலர்ஸ் மற்றும் பூனைகளின் மீது அளவற்ற ஆர்வமுடையவர். சமீபத்தில் விஜய்சேதுபதி ராயல் என்ஃபீல்டின் உயர்ரக இந்திய வாகனமான இன்டர் செப்டர் 650 பைக்கை தனக்கு வாங்கச் சொல்லியிருக்கிறார். அவரும் அதே வண்டியை புக் செய்தார். தன் பிறந்தநாளன்று தானே அந்த வண்டியை ஓட்டி வந்த விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேமுக்கு பரிசளித்து விட்டுச் சென்றுள்ளார். இந்த மொத்த சர்ப்ரைஸுக்கு சர்ப்ரைஸாக பைக்கின் பதிவு எண்ணை '0096' என வாங்கியுள்ளார் பிரேம்.

 

 

 

படு ஸ்டைலாக அந்த பைக்கில் பறக்கும் பிரேம், தனது வீட்டில் இருக்கும் ஒரு பூனைக்குட்டிக்கு த்ரிஷா என்று பெயரிட்டுள்ளார். இதையறிந்த த்ரிஷாவுக்கு 'செம ஹாப்பி அண்ணாச்சி'.