`96’ விழா மேடையில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! - விஜய் சேதுபதியின் புதிய பட அறிவிப்பு | actor vijay sethupathi announced his new movie

வெளியிடப்பட்ட நேரம்: 22:29 (04/02/2019)

கடைசி தொடர்பு:07:04 (05/02/2019)

`96’ விழா மேடையில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! - விஜய் சேதுபதியின் புதிய பட அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் '96'. த்ரிஷாவுக்கு இப்படத்தின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதிக்கு நல்ல ஒரு படமாகவும் அமைந்தது. இயக்குநர் பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அக்டோபர் மாதம் ரிலீஸான இப்படம் ஒரு காதலர் தினம் கொண்டாட வைத்த பீலிங்கை கொடுத்தது என்பதால் நீண்ட நாள்கள் மக்களின் வரவேற்பைப் பெற்று ஓடியது. பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது.

விஜய் சேதுபதி

விழாவில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பிரேம் குமார் உட்பட `96' படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி எஸ் மித்ரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ``துக்ளக்'' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர்கள் பாலாஜி தரணீதரன், பிரேம் குமார் ஆகியோரின் நெருங்கிய நண்பரான டெல்லி பிரசாத் என்பவர் இயக்கவுள்ளார். `96' படத்தை விநியோகித்த செவன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஏற்கெனவே ஆறு படங்களுக்கு மேல் நடித்து வரும் விஜய் சேதுபதியின் புதிய பட அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க