`அப்போ அக்கவுண்ட்ல 500 ரூபாய் இல்ல; இப்போ டாப் 30ல் ஒருத்தன்' - நெகிழும் விஜய் தேவரகொண்டா! | vijay devarakonda listed as the top 30 under 30 by forbes

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:07:44 (05/02/2019)

`அப்போ அக்கவுண்ட்ல 500 ரூபாய் இல்ல; இப்போ டாப் 30ல் ஒருத்தன்' - நெகிழும் விஜய் தேவரகொண்டா!

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றுள்ளது. ‘ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, `பெல்லி சூப்புலு', `அர்ஜுன் ரெட்டி', `கீதா கோவிந்தம்', `டாக்ஸிவாலா' உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழிலும் ரசிகர்களைப் பெற்றவர். 

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா. 'நோட்டா'  படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். தன் 'டோன்ட் கேர் ஆட்டிட்யூட்' பேச்சு, நடை, பழகும் விதம் என அனைவரையும் கவர்ந்த இவர், நோட்டா படம் வெற்றி பெறாததுக்கு கதாநாயகனான தானே காரணம் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது,  பிரபல ஆங்கில பத்திரிகை 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ள இந்திய சாதனை இளைஞர்கள் பட்டியலான  `30 அண்டர் 30'யில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் 72-ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தேவரகொண்டா

இது குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா  ``25 வயதில் ஆந்திரா வங்கில 500 ரூபாய் இல்லனா அக்கவுண்ட் கிளோஸ் ஆகிடும். அதனால 30 வயசுக்குள்ள செட்டிலாகிடுனு அப்பா சொல்லுவார். பெத்தவங்க ஆரோக்யமா இருக்கும்போது இதெல்லாம் பண்ணாதான் பின்னாடி சந்தோஷமா இருக்க முடியும்னு சொன்னார். 4 வருஷம் கழிச்சு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் நான் 30 அண்டர் 30ல இருக்கேன்' என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  

விஜய் தேவரகொண்டா  ‘டியர் காம்ரேட்’ என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து `பெல்லி சூப்புலு' படத்தில் இயக்கிய தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.