`ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்னு சொன்ன உடனே பக்னு ஆயிடுச்சு' - நடிகர் கார்த்தி! | actor karthi talks about on harris jayaraj music

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:08:02 (05/02/2019)

`ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்னு சொன்ன உடனே பக்னு ஆயிடுச்சு' - நடிகர் கார்த்தி!

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்ருதா நடித்துள்ள `தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடந்தது. 

அதில் பேசிய நடிகர் கார்த்தி, ``ரொம்ப நாளுக்குப் பிறகு இப்படியொரு ஸ்டைலிஷான படம் பண்றேன். அதனால எங்கயுமே பருத்திவீரன், கொம்பனோட சாயல் தெரியாத மாதிரி கொஞ்சம் அர்பன் லுக்ல தான் பண்ணிருக்கோம்."

கார்த்தி

மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் முறை நடிப்பதைப் பற்றி, ``ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்கானு பக்னு ஆயிடுச்சு. அண்ணனுக்கு நிறைய நல்ல பாட்டு போட்டிருக்காரு. அதுதான் எனக்கு பயமாவே இருந்தது. அண்ணா அளவுக்கு என்னால டான்ஸ் ஆட முடியுமா முடியாதேனே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ஏதோ நல்லா பண்ணிருக்கேனு நினைக்கிறேன்" என கார்த்தி கூறினார்.

தேவ்

`தேவ்' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றிப் பேசிய கார்த்தி, ``நிறைய கவனம் செலுத்தி ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே எல்லாம் சரியா இருக்கானு பாத்துட்டு, ஸ்கிரிப்ட் ரீடிங் எல்லாம் ஒழுங்கா பண்ணீட்டுதான் போய் நடிச்சோம்," என்றார். பின்பு ஆயிரத்தில் ஒருவன் - 2 பற்றி பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி, ``இப்போ எந்த தயாரிப்பாளர் அந்தப் படத்த எடுக்க முன்வருவாங்கனு தெரியல. முதல் பாகத்துக்கு என்ன மாதிரி வரவேற்பு இருந்ததுனு எல்லாருக்கும் தெரியும். அப்படி யாராவது வந்து அந்தப் படம் அமையணும்னு இருந்தா கண்டிப்பா அமையும்," என்றார்.