ஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்! | Mysskin explains vishal works on online piracy to vasanthabalan

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (05/02/2019)

கடைசி தொடர்பு:09:30 (05/02/2019)

ஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்!

புதுமுக இயக்குநர் சீயோன் இயக்கத்தில் தயாராகியுள்ள `பொது நலன் கருதி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  மிஷ்கின், வசந்த பாலன், திருமுருகன் காந்தி, இயக்குநர் மீராகதிரவன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பொது நலன் கருதி

விழாவில் சிறுபடங்களின் ரிலீஸ் செய்யும் சிரமும் ஆன்லைன் பைரசி குறித்து இயக்குநர் வசந்தபாலன் பேசினார். அப்போது, ``கே.ஜி.எஃப் என்ற கன்னட படம் இன்னும் பைரசி செய்யப்படவில்லை, மலையாளப் படங்கள் இணையத்தில் வர 6 மாதங்களாகிறது. போனா வாரம் ரிலீஸான பேரன்பும் சர்வம் தாள மயமும் அதுக்குள்ள தமிழ் ராக்கர்ஸில் வந்துடுச்சு. சின்ன படங்கள் அழிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. மேலே உள்ள பெரிய ஹீரோக்கள் படங்கள் மட்டும் நல்லா ரிலீஸாகும். 

வசந்த பாலன்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் துப்பறிவாளனாக இருக்கிறார்,  என்னென்னமோ செய்யுறார். ஆனால், தமிழ் ராக்கர்ஸ் கண்டுபிடிக்கலியா... இல்ல கண்டுபிடிச்சும் சும்மா இருக்கீங்களா. நாளைக்கு என்னோட படம் வந்தாலும் அது திருடப்படும். இங்க இருக்க கட்டமைப்புனால என்னோட படம் தோல்வியடையும். அதைத் தாண்டி ஜெயிக்கணும். நான் நலிவடைஞ்சா எனக்காக இளையராஜா, ரஹ்மானை கூப்பிட்டு விழா நடத்தணும்’’ என்றார். 

மிஷ்கின்

இதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், ``வசந்த பாலன், என் தம்பி துப்பறிவாளன் பத்தி பேசினார். அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் நான் பேசுவேன். நாலு மாசம் இரவும் பகலுமாக தமிழ் ராக்கர்ஸை பிடிக்க வேல செஞ்சோம் சார். நான் சத்தியமா பார்த்தேன் சார். அவருக்கும் (விஷாலுக்கும்) அதுதான் ஆசையும். ஆனா, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது இயற்கை அவன் பிழைப்புக்கு அவன் பண்றான்’’ என்றார்.