`பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்! - சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதி கருத்து | Vijay Sethupathi supports Kerala Chief Minister Pinarayi Vijayan in the Sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:10:00 (05/02/2019)

`பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்! - சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதி கருத்து

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக அசத்தி வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அவர் பின்னால் மிகப்பெரும் பட்டாளமே செல்லும். அந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி இயக்குநர் சீனு ராமசாமியின் `மாமனிதன்' படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி

இந்தப் படப்பிடிப்பு கேரளாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அந்தப் படப்பிடிப்புக்கு இடையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். 

சேதுபதி

`` நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளைச் சந்திக்கின்றனர். நம் அனைவருக்கும் தெரியும் அந்த வலி எதனால் வருகின்றது என்று. நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம். அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என விஜய் சேதுபதி கருத்து தெரிவித்தார்.

இதற்குப் பிறகு கேரளாவில் உள்ள பலர் அவரின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேரள சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி குறித்த கருத்துகளே அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.