`` `சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டீங்களே'னு நடிகர்கள் கேட்கிறாங்க!’’ - நதியா | actress nadhiya talks about her cinema and personal life

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (05/02/2019)

கடைசி தொடர்பு:11:58 (05/02/2019)

`` `சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டீங்களே'னு நடிகர்கள் கேட்கிறாங்க!’’ - நதியா

நதியா

மிழ் சினிமா டிரெண்ட் செட்டர் நடிகைகளில் முக்கியமானவர் நதியா. ஹீரோயினாக சில ஆண்டுகள் மட்டுமே நடித்தவர் இன்றளவும் ரசிகர்களின் அன்பைத் தக்கவைத்திருக்கிறார். தன் சினிமா பயணத்தை ரீவைண்டு செய்கிறார். 

``நடிகையாகணும் புகழ் பெறணும்னு நினைச்சதில்லை. சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வர, அர்ப்பணிப்புடன் நடிச்சேன். அதுக்குக் கிடைச்ச பிரதிபலன்தான் ரசிகர்களின் அன்பு. நாலு வருஷம்தான் நடிச்சேன். பிறகு கல்யாணமாகி வெளிநாட்டில் குடியேறிட்டேன். அப்போதுதான், ரசிகர்கள் என் மேல் வெச்சிருந்த அன்பையும் எனக்கான புகழையும் தெரிஞ்சுகிட்டேன். அப்போ ஃபீல் பண்ணலை. `நமக்கான சினிமா கரியரை இன்னும் நல்லா பயன்படுத்தியிருக்கலாமோ'னு இப்போ நினைக்கிறேன். அதனால் என்ன. நான் அதிகம் எதிர்பார்த்த குடும்ப வாழ்க்கை நல்லா போகுதே!

நதியா

‘உங்க கூட ஜோடியா நடிக்கலாம்னு நினைச்சேன். நீங்க, ரொம்ப சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு, சினிமாவுலயிருந்து விலகிப்போயிட்டீங்களே. ஏன் இப்படிப் பண்ணீங்க?’னு இன்னைக்கு வரை பல ஹீரோக்கள் அன்பாகக் கேட்கிறாங்க. அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படறேன். அப்படி நடந்தால், சினிமா வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்துவேன். எதார்த்தமான, எளிமையான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவேன். சுயநலமாகச் செயல்பட்டால், பொய்ப் பேசினால், சொன்ன நேரத்தை மீறினால் எனக்குக் கோபம் வரும். மத்தபடி நான் ரொம்ப ஜாலியான பர்சன்தான்’’ எனப் புன்னகைக்கிறார் நதியா.

குறும்புக்கார மாணவி, ஹீரோயின் வாய்ப்பு, சினிமா புகழ், நோ கிளாமர், நோ கிசுகிசு, காதல், திருமண வாழ்க்கை, பர்சனல் உலகம், அழகு ரகசியம் உட்பட தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறார் நதியா. இன்று வெளியான அவள் விகடனில், `எவர்கிரீன் நாயகிகள்' என்ற தொடரில்.