பிரியா வாரியரின் `ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Oru adaar love release date announced

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:13:50 (06/02/2019)

பிரியா வாரியரின் `ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஒரு பாடல்... ஒரு கண்... அதை சிமிட்டிக்காட்டி தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சிம்டாக்காரியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அவர் நடிக்கும் `ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பிரியா வாரியர்

`ஒரு அடார் லவ்’ படத்தில் `மாணிக்க மலராய பூவி’ என்று ஒரு பாடல் மூலமாக சினிமா உலகுக்கு அறிமுகமானவர் பிரியா வாரியர். வெளியான சமயத்தில் இந்தப் பாடலுக்கு ஏகப்பட்ட எதிரிப்புகளும் வந்தன. இதைத் தொடர்ந்து `ஸ்ரீதேவி பங்களா’ எனும் இந்தி பட டீஸரிலும் இடம்பெற்றிருந்தார். அதில் வரும் சில காட்சிகள் ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் பிரதிபலித்ததால் அந்தப் படத்துக்கும் சில சர்ச்சைகள் ஏற்பட்டு `அது இது இல்ல’ எனப் பேட்டி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், `ஒரு அடார் லவ்’ படம் வரும் பிப்ரவரி 14, அதாவது காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் இவரோடு சேர்த்து ரோஷன் அப்துல் ரௌஃப், நூரின் ஷெரிஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். பல்வேறு ஊர்களில் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் டீம், தற்போது சென்னையில் உள்ளது. ஆக, இவரின் கண் சிமிட்டலைப் பெரிய திரைகளில் வரும் பிப்ரவரி 14 அன்று காணலாம்.