`இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்!'- அலியா பட் மெசேஜ் | Alia bhatt about her relationship

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:35 (06/02/2019)

`இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும்!'- அலியா பட் மெசேஜ்

கடந்த வருடம் பாலிவுட் பக்கம் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ், ரன்வீர் சிங் -தீபிகா படுகோன் ஆகிய பெரும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து இவ்வருடம் ஹாட் டாப்பிக்காக இருப்பது ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடிதான். இவர்களது திருமணம் எப்போது என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இது குறித்து அலியா பட் பதில் கூறியுள்ளார். 

ரன்பீர் கபூர் - அலியா  பட்

பிங்க்வில்லாவின் ரிப்போர்ட்டின்படி அலியா பட், ``மக்கள் இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும். ரெண்டு அழகான கல்யாணம் போன வருஷம்தான் நடந்து முடிஞ்சது. படம் பார்க்கிறது, படத்துல வேலை பார்க்கிறதுன்னு எல்லாரும் மற்ற வேலைகளைப் பார்த்தா நல்லா இருக்கும். மத்ததெல்லாம் அப்புறம்தான்" எனக் கூறியிருக்கிறார். தீபிகா - ரன்வீர் ஜோடி இத்தாலியிலும், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் ஜோடி ஜோத்பூரிலும் திருமணம் செய்துகொண்டது.

அந்த சமயத்தில் வெளிவந்த இவர்களது புகைப்படம்தான் பாலிவுட்டில் வைரலாகப் பரவிக்கொண்டிருந்தது. தற்போது ரன்பீர் - அலியா ஜோடியைத்தான் பாலிவுட் பக்கம் அதிகமாக கிசுகிசுத்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம், இருவரும் ஜோடி சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. போக, ரன்வீர் சிங், கரன் ஜோகர் ஆகிய பிரபலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருவரும் சென்றிருந்தனர். ஆக, கூடிய விரைவில் பாலிவுட் பக்கம் இன்னொரு அழகான திருமணத்தை இந்த வருடம் எதிர்பார்க்கலாம்!