`விஜய் 63'- சந்தோஷ் நாராயணன் கலாய்க்கு விவேக் பதில் என்ன? | santhosh narayanan makes fun of lyricist vivek on twitter

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:20 (06/02/2019)

`விஜய் 63'- சந்தோஷ் நாராயணன் கலாய்க்கு விவேக் பதில் என்ன?

`மெர்சல்' படத்தின் `ஆளப்போறான் தமிழன்' பாடலாசிரியர் விவேக்கை மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலராகச் செய்தது. அதைத் தொடர்ந்து `சர்கார்' படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதினார். இதன் காரணமாக, ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத விஜய் படத்துக்கும் அனைத்து பாடல்களும் இவர்தான் எழுதி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன்

விவேக்

இது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ``ஹாய் விவேக் சார்... எப்படி இருக்கீங்க? நல்ல சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. ஃபேமிலியை கேட்டதா சொல்லுங்க. அப்படியே 'விஜய் 63' பட அப்டேட்டையும் அப்பப்போ கொடுங்க. இங்கே எல்லாம் நல்லா போகுது" என்று ட்விட்டர் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த விவேக், 'ஏன் தெய்வமே?' என வடிவேலு இருக்கும் மீமை பதிவிட்டார். சிறிது நேரம் கழித்து, `அந்நியன்' படத்தில் விக்ரம் காதல் கடிதம் எழுதும் காட்சியை மீமாக ட்வீட் செய்து அவரை கலாய்த்தார், சந்தோஷ் நாராயணன். ``அண்ணா... என் ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் ஆகிடுச்சோனு நான் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இருங்க அண்ணிக்கிட்ட போட்டுகொடுக்கிறேன்" என பதிலளித்துள்ளார், பாடலாசிரியர் விவேக். இவர்களின் இந்த உரையாடல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.     

சந்தோஷ் நாராயணன்

விவேக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க