`அசுரன்' படத்தில் நடிப்பது உண்மைதான், ஆனால்..!- இயக்குநர் பாலாஜி சக்திவேல் | Director Balaji Sakthivel confirms acting in asuran movie

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:50 (06/02/2019)

`அசுரன்' படத்தில் நடிப்பது உண்மைதான், ஆனால்..!- இயக்குநர் பாலாஜி சக்திவேல்

`வடசென்னை' படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் `அசுரன்'. கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார். இதுதவிர, கருணாஸ் மகன் கென் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அசுரன்

சில நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் வில்லன் ரோலில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்க இருப்பதாகத் தகவல் வந்தது. இது குறித்து பாலாஜி சக்திவேலிடம் பேசினேன். 

பாலாஜி சக்திவேல்

``இயக்குநர் வெற்றிமாறனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய படைப்புகள் பெரிதும் பேசப்படும். நிறைய பொது இடங்களில் அவரை சந்தித்து இருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் `என்னோட படத்தில் நீங்க நடிக்கணும்'னு சொல்லுவார். ஏதோ ஜோக் அடிக்கிறார்னு நினைப்பேன். திடீரென்னு என்னைச் சந்தித்து `அசுரன்' படத்தில் நடிக்கக் கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். படத்தோட கதையைச் சொன்னார். அதில் என் கேரக்டர் பற்றியும் சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. ஆனா, படத்துல வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன்னா இல்லையானு சொல்ல முடியாது. என்னோட கேரக்டர் என்னங்கிறது சர்ப்ரைஸ்'' என்று கலகலப்பாக முடித்தார் பாலாஜி சக்திவேல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க