விஜய் சேதுபதி வெளியிட்ட `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ டிரெய்லர்! | trailer of ispade rajavum idhayaraniyum released

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (06/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (06/02/2019)

விஜய் சேதுபதி வெளியிட்ட `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ டிரெய்லர்!

'புரியாத புதிர்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்திருக்கும் படம், 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்'. இப்படத்தை மாதவ் மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மிகவும் நேசித்த ஒருவரை எந்த ஒரு புள்ளியில் நாம் வெறுக்கத் தொடங்குகிறோம்.

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்

அன்பு எனும் பெயரில் சில சமயங்களில் நாம் செய்யக்கூடிய வன்முறை என்ன? ஆகியவற்றைப் பேசும் படமாக இது இருக்கும் என இயக்குநர் தெரிவித்திருந்தார். சாம் சி.எஸ் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு, இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மா.கா.பா ஆனந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெயிலரை விஜய் சேதுபதி, இயக்குநர்கள் ராம், கெளதம் மேனன், சீனு ராமசாமி, புஷ்கர் - காயத்ரி, கிருத்திகா உதயநிதி, வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க