ஆதிக் ரவிச்சந்தருடன் இணையும் பிரபுதேவா! | Prabhudeva signs a movie with adhik ravichandar

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (06/02/2019)

ஆதிக் ரவிச்சந்தருடன் இணையும் பிரபுதேவா!

நடிகர் பிரபுதேவா காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு, ஏற்கெனவே அவர் நடித்த 'சார்லி சாப்ளின் - 2' வெளியாகியிருக்கும் நிலையில், மேலும் 'பொன்மாணிக்கவேல்', 'தேவி - 2', 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்' என ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இவையல்லாமல், சல்மான் கானை வைத்து விரைவில் 'டபாங்-3'யையும் இந்த ஆண்டு ஜூனுக்கு மேல் இயக்கவிருக்கிறார்.

பிரபுதேவா

இந்நிலையில், பிரபுதேவா நடிக்க, `த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திர் எழுதி இயக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பும் அமைதியான முறையில் துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரபரப்பான ரிவெஞ்ச் கதையோடு உருவாகிவரும் இத்திரைப்படத்துக்கு, மும்பை மற்றும் இலங்கையில் நடக்கும் படி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படத்தில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர் எனவும் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபுதேவாவை வைத்து எடுக்கப்படும் படங்கள், பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், அவற்றின் இந்தி டப்பிங் வெர்ஷன்களுக்கான தொலைக்காட்சி உரிமை பெரும் விலைக்குப் போவதால், தயாரிப்பாளர்கள் அவரை வைத்துப் படம் எடுக்க பெரும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.