"நீதி, நியாயம்னா ஸ்பெல்லிங் என்னன்னு கேக்கற ஒருத்தன்!" - வெளியானது 'அயோக்யா' டீசர் | ayokya teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (06/02/2019)

கடைசி தொடர்பு:19:13 (06/02/2019)

"நீதி, நியாயம்னா ஸ்பெல்லிங் என்னன்னு கேக்கற ஒருத்தன்!" - வெளியானது 'அயோக்யா' டீசர்

விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

அயோக்யா

`சண்டக்கோழி-2' படத்தைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் புதிய படத்தின் பெயர் `அயோக்யா'. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்குகிறார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடிக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். டெம்பர் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

 சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சன்னிலியோன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. ஜெய் நடித்த `வடகறி' படத்தில் சன்னிலியோன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.