தியேட்டரில் அனுமதியின்றி வீடியோ எடுத்தால் 10 லட்சம் அபராதம் - பைரஸிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி! | amendments to cinematagraphy act 1952 camcording will attract fine and imprisonment

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:49 (07/02/2019)

தியேட்டரில் அனுமதியின்றி வீடியோ எடுத்தால் 10 லட்சம் அபராதம் - பைரஸிக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி!

பைரஸி செய்வது, பிரதிகள் எடுப்பது, பிரதிகளைப் பரிமாற்றம் செய்வது ஆகிய செயல்கள் சட்டவிரோதமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பைரஸி

உலக அளவில் திரைப்படத்துறையை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் விஷயங்களில் பிரதானமானது பைரஸி. திரைப்படத்துறையின் நீண்ட கால பிரச்னையான இந்த பைரஸிக்கு அடிப்படையே, தியேட்டர் திரையில் ஓடும் படத்தை திருட்டுத்தனமாக எடுக்கும் வீடியோ பதிவுதான். இதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

ரவிசங்கர் பிரசாத்

இது தொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள செய்தியில்" வீடியோ பைரஸி எடுப்பவர்களை கிரிமினல் சட்டத்துக்குள் கொண்டுவருவதற்கு ஏதுவாக, ஒளிப்பதிவு மசோதா 1952ல் 'திரைப்பட பைரஸி, காப்புரிமை மீறல்' தொடர்பான சட்டத்திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, இனி திரைப்படங்களை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது, பிரதிகள் எடுப்பது, பிரதிகளைப் பரிமாற்றம் செய்வது ஆகிய செயல்கள் சட்டவிரோதமாகும். அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்" எனக் கூறினார்.