`5 வருஷ லவ், ஆடம்பர மேரேஜ் பங்ஷன்!’- திருமணம் பற்றி பகிர்கிறார் 'சின்னதம்பி' ஸ்வேதா | chinnathambi serial artist swetha says about her marriage experience

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (07/02/2019)

கடைசி தொடர்பு:15:07 (07/02/2019)

`5 வருஷ லவ், ஆடம்பர மேரேஜ் பங்ஷன்!’- திருமணம் பற்றி பகிர்கிறார் 'சின்னதம்பி' ஸ்வேதா

`சின்னதம்பி' சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் அண்ணியாக நடிப்பவர் ஸ்வேதா. மீசையை முறுக்கு, கவண், துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர்..ஸ்வேதாவுக்கு ஸ்ரீகாந்தன் என்பவருடன் டும் டும் டும்  நடந்து முடிந்துள்ளது. திருமணப் பந்தத்தில் காலடி எடுத்துவைத்திருக்கும் ஸ்வேதாவிடம் ஒரு ஸ்வீட் சாட்           

         ஸ்வேதா

``என் கணவர் ஸ்ரீகாந்தன் , சென்னையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நாங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ். எப்போ இவரை லவ் பண்ண ஆரம்பிச்சேனு இப்ப வரைக்கும் புரியலை. ஆனா இப்படிப்பட்ட ஒரு நல்லவர் நமக்கு லைஃப் பார்ட்னரா அமைஞ்சா நல்லா இருக்கும்னு மனசுலபட நான்தான் முதலில் புரொபோஸ் பண்ணினேன். 

அவர் மனசுலேயும் அதே எண்ணம் இருந்திருக்கும்போல... உடனே `யெஸ்' சொல்லிட்டார். லைஃப்ல கொஞ்சம் செட்டில் ஆனபிறகு திருமணம் பண்ணிக்கலாம்... இதுதான் எங்க ரெண்டு பேரோட எண்ணமா இருந்தது. நல்லா டிஸ்கஸ் பண்ணினோம். மேரேஜ் ஆகுறவரைக்கும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம்னு முடிவு பண்ணினோம். 

ஐந்து வருஷம் ரிலேஷன்ஷிப்.. ஒருத்தரை ஒருத்தர் இன்னும் இன்னும் ஆளமா புரிஞ்சுகிட்டோம். இப்போது ரெண்டு பேரும் கரியர்ல கொஞ்சம் செட்டில் ஆகிட்டோம்ங்கிறதுனால கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தோம். அவரோட சொந்த ஊரான சேலத்தில் பாரம்பர்ய முறைப்படி ஆடம்பரமா கல்யாணம் பண்ணிகிட்டோம். ஃப்ரெண்ட்ஸ்களுக்காக சென்னையில ரிசப்ஷன், ஆடல் பாடல்னு கலக்கலா நடந்து முடிஞ்சது எங்க ரிசப்ஷன்.  இனி, வழக்கம்போல்... நாளையில் இருந்து ஷூட்டிங் கிளம்பணும், அவர் ஆபீஸ் கிளம்பணும். ரெண்டு பேரும் ஃப்ரீ ஆகுற ஒரு நாள்ல ஹனிமூன் பிளான் பண்ணணும்'' என்கிறார் கன்னம் சிவக்க.