வெளியானது 'ஐரா' நயன்தாராவின் புகைப்படங்கள்! - உற்சாகத்தில் ரசிகர்கள் | nayanthara's stills in airaa film were released

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (07/02/2019)

வெளியானது 'ஐரா' நயன்தாராவின் புகைப்படங்கள்! - உற்சாகத்தில் ரசிகர்கள்

'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தை 'லக்‌ஷ்மி', 'மா' குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தையும் இயக்கிய கே.எம். சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தவிர, கலையரசனும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நயன்தாரா

`அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படத்துக்கு, ஜோகேஷ் கார்த்திக் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மேகதூதம்' என்ற பாடல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு. நயன்தாராவின் நிறத்தையே முழுக்க மாற்றி இருக்கிறார்கள். இவர் பல்வேறு கேரக்டர்களில் நடித்து மெர்சல் காட்டியிருந்தாலும், இந்தப் படத்தில் இவரது தோற்றமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளது. இவரது அப்பாவித்தனமான முக பாவனைகளைக்  கொண்ட புகைப்படங்களை நயனின் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.  

'ஐரா' நயன்தாராவின் புகைப்படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க