டப்ஸ்மாஸ் புகழ் மிருணாளினி ஹீரோயினாக நடிக்கும் 'டூப்ளிகேட்' | mirnalini ravi acting in new movie 'duplicate'

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (07/02/2019)

கடைசி தொடர்பு:21:11 (07/02/2019)

டப்ஸ்மாஸ் புகழ் மிருணாளினி ஹீரோயினாக நடிக்கும் 'டூப்ளிகேட்'

இயக்குநர் சசிகுமார் மற்றும் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக வேலைபார்த்த சுரேஷ் குமார், 'டூப்ளிகேட்' என்ற படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் ஜானரான இந்தக் கதையில் ஹீரோயினாக, டப்ஸ்மாஸ் மிருணாளினி கமிட் ஆகியுள்ளார். நடிகையை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. 

மிருணாளினி

ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் இந்தக் கதையில், சிறப்புக் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளராம். 'உத்தரவு மகாராஜா' படத்தில் ஹீரோவாக நடித்த உதயா, இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, நரேன் பாலகுமார் இசையமைக்க இருக்கிறார். 

 மிருணாளினி, விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும், சுசீந்திரன் இயக்கும் 'சாம்பியன்' படத்திலும் நடித்துவரும் நிலையில், இந்தப் படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என படக்குழு தெரித்துவருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க