``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரையைத்தான்"- மிஷ்கின் | director mysskin speech about piracy issue!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/02/2019)

கடைசி தொடர்பு:13:00 (08/02/2019)

``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரையைத்தான்"- மிஷ்கின்

``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரையைத்தான்

``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையைத்தான்" என கார்னிவெல் சினிமாஸ் திறப்புவிழாவில் மிஷ்கின் பேசினார்.

மிஷ்கின்


இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014-ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி, பல மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை நிர்வகித்து வரும்  `கார்னிவெல் சினிமாஸ்'  நிறுவனம், சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள  ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவியுள்ளது. அதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில்,  இயக்குநர் ராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன், நடிகர் வைபவ் உள்ளிட்டோரும்  பங்கேற்றனர்.

மேலும், இத்திரையரங்க வளாகத்தில் தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக மகளிர்காக பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாள்களில் 4 காட்சிகளும் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மிஷ்கின்

சென்னையில் EVP சிட்டியில் நடந்த இந்த `EVP - கார்னிவெல் சினிமாஸ்' மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் கோலாகல தொடக்க விழாவை EVP குரூப் நிர்வாகி  ஈ.வி.பெருமாள்சாமி, அவரின் மகனும் ஈவி.பி குரூப் எம்.டியுமான சந்தோஷ் ரெட்டி, கார்னிவெல் எம்.டி  P.V.சுனில், கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் தங்கள் குடும்ப சகிதமாக கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

அவர்களுடன் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன், விநியோகஸ்தர் அருள்பதி , இயக்குநர்கள் மிஷ்கின், ராம் , பாபு கணேஷ் , நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன் , `பேரன்பு ' சாதனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இத்திரையில் `பேரன்பு' திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார்.

இதுகுறித்து மிஷ்கின் பேசும்போது, ``கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான். எனவே, எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். அதேபோல பெரிய திரையில் ரிலீஸாகும் சினிமாவை திரையரங்குகளுக்கு வந்துப் பாருங்கள். பைரஸியை திருட்டு வி.சி.டியை திரும்பி பார்க்காதீர்கள்''  என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய, இயக்குநர் ராம், ``எனது `பேரன்பு' முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷமா இருக்கு. கூடவே பெருமையா இருக்கு' என்றார் மகிழ்ச்சியுடன்.

அதன்பின், கார்னிவெல் எம்.டி  பி.வி. சுனில், கார்னிவெல் சென்னை நிர்வாகி  ஜுனித் உள்ளிட்டோர் பேசியபோது, ``2012 கொச்சின் ஏர்போர்ட் அருகே முதன்முதலாக டாக்டர் ஸ்ரீகாந்த் பாஷி ஒரு திரையரங்கை உருவாக்கினார். இன்று சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் கிட்டத்தட்ட 500 ஸ்கிரீன்கள் உள்ளன. சென்னையில் முதல் பெரிய மல்டி பிளக்ஸ் தியேட்டர் இதுதான். இன்னும்  2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும் திட்டம் உள்ளது. உலகளவில் 1000 திரையரங்குகளை திறக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழ் படத்தயாரிப்பிலும், விநியோகத்திலும் நேரடியாக இறங்க உள்ளோம். அடுத்து ஆவடி மற்றும் மதுராந்தகம் அருகில் 6 ஸ்கிரீன் மல்டி பிளக்ஸ் தியேட்டரை கட்டுவதற்கான ஏற்பாட்டில் உள்ளோம்.

இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்குகளில், ஸ்கிரீன்-1 ல் 213 இருக்கைகளும் , ஸ்கிரீன் -2 மற்றும் 5-ல் 323, ஸ்கிரீன் 3 & 4 - ல் 221, ஸ்கிரீன்- 6 ல் 214. இருக்கைகளுமாக இந்த ஒரு மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன. அதே மாதிரி இங்குள்ள ஒரு திரையரங்கம் 4-கே  புரஜக்ஷன் வசதியும் மீதி 5 திரையரங்கங்கள் 2 -கே புரஜக்ஷன் வசதியும் கொண்டவை. இத்தனை சிறப்புகளையும் EVP - கார்னிவெல் சினிமாஸ் உள்ளடக்கியுள்ளது'' என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க