'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை! - ஓவியா '90 ML' இயக்குநர் | Oviya '90 ML' director anitha udeep' says about that movie

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (08/02/2019)

'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை! - ஓவியா '90 ML' இயக்குநர்

என்னோட முதல் படம், 'குளிர் 100 டிகிரி'. இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு லாங் லீவ் நான் எடுத்துக்கிட்டேன். அதுக்குக் காரணம், என்னோட ஃபேமிலி. ஏன்னா, எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தைகள் பிறந்தாங்க. வீட்டை கவனிக்கிறதுதான் முக்கியம்னு தோணுச்சு. அதனால பசங்க வளர்ற வரைக்கும் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிட்டேன். இப்போ, திரும்பவும் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். என்னோட '90 ML' திரைப்படம் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்'' என்கிறார், இயக்குநர் அனிதா உதீப். 

ஓவியா 90 ML

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா ஹீரோயினாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் '90 ML'. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநரிடம் பேசினோம். 

''இந்தப் படம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பற்றிய கதைன்னு சொன்னாலே, ஏதோ தியாகத்தை, சாதனையைப் பற்றி சொல்ல வரேன்னு நினைச்சிக்குவாங்க. ஆனா, இதுவரைக்கும் எந்தப் படமும் பெண்கள் மனசுக்குள்ளே இருக்கிற உணர்ச்சிகளைப் பற்றி பேசினது இல்லை. இந்தப் படம் ,பெண்களுக்கு இருக்கிற ஆசைகள், உணர்ச்சிகளை எந்த சமரசமும் இல்லாம பேசியிருக்கு. பெண்களை உத்தமியா மட்டும் பார்க்காதீங்க. அவங்களுக்குள்ளே இருக்கிற கனவுகளையும் பாருங்கன்னு என்னோட படத்தின் மூலமா சொல்லியிருக்கேன். 

ஓவியா

படத்துல 'ரீத்தா'ங்கிற கேரக்டரில் ஓவியா நடிச்சிருக்காங்க. 'பிக் பாஸ்' பார்க்கிறப்போ நம்ம கதைக்குத் தேவையான ஹீரோயின் இவங்கதான்னு மனசு சொல்லிச்சு. உடனே, ஓவியாகிட்ட இதைப் பற்றி பேசுனேன். அவங்களுக்கு இந்தக் கதை பிடிச்சிருந்தனால, ஓகே சொல்லிட்டாங்க. ரொம்ப எதார்த்தமா ஓவியா நடிச்சிருக்காங்க. 

சென்னையில இருக்கிற ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கு ஓவியா குடியேறப் போகும்போது, அங்க இருக்கிற பெண்களைப் பார்த்து இவங்க என்ன ஃபீல் பண்றாங்க, அங்கே இருக்கிற பெண்கள் எப்படி ஓவியாவைப் பார்க்குறாங்க, பெண்கள் மனசுக்குள்ளே ஆசைக்கு எதுக்கு பூட்டு போடணும்னு ஓவியா மூலமா சொல்லியிருக்கேன். 

என்னோட 'குளிர் 100 டிகிரி' படத்துல வர்ற 'மனசெல்லாம் உன்னோட கொடுத்தேன்' பாட்டை சிம்பு பாடியிருப்பார். இந்தப் பாட்டு அப்போ செம ஹிட். அப்போதிலிருந்தே சிம்புகூட நல்ல நட்பு இருக்கு. சிம்பு இசையமைத்த 'சக்கப் போடு போடு ராஜா' பாட்டெல்லாம் கேட்டேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால சிம்புவை என்னோட படத்துக்கு கம்போஸ் பண்ணி தரச்சொல்லி கேட்டேன். அவரும் தாராளமா ஒத்துக்கிட்டார். நிறையப் பேர் சிம்பு இந்தப் படத்துல நடிச்சிருக்காரா? கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காரான்னு கேட்கிறாங்க. இதுக்கான பதில் படத்துல இருக்கு'' என்றவரிடம், படத்துக்கான 'ஏ' சான்றிதழ் பற்றி கேட்டால், 

simbu

''இந்தப் படத்தோட கதையை நான் எழுதும்போதே, இதுக்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்கும்னு எனக்குத் தெரியும். ஏன்னா, இது அப்படிப்பட்ட கதைதான். படத்துல தப்பான விஷயம் எதுவும் சொல்லலை. ஆனா, பெண்களோட ஆசைகள் பற்றி சொல்றப்போ, சில விஷயங்களை நாம சொல்லவேண்டியிருக்கு. அதுக்காகத்தான் இந்தச் சான்றிதழ்  கொடுத்திருக்காங்க. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தது எனக்கு எந்த விதத்திலும் கவலையில்லை. ஓவியாவுக்கும் கவலை இருக்காதுனு நினைக்கிறேன்'' என்று சொல்லி முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க